பாடல் #39342
சுரபதி சுசிர்தா நிர்மல
🔤 Surapathi Susirthaa Nirmala
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுரபதி சுசிர்தா நிர்மல சொரூபா தோத்திரத் தொளிர்தீபா 1. பரம சங்கார்த்தனம் பத்தர் சங்கீர்த்தனம் பவத்துலோக நேய தேவ பாலனே சுமனாச் சரணம் 2. மாதவ மரிதரும் மனுடகுமாரா வஸ்திருபதார மகத்துவ அதிகாரா நீதிப்பிரதாப நித்திய விஸ்தாரா யேதமிலாதவ தீத பராபர யேசு நாத தவீதா சரணம் 3. ஆரணப் பரம் பொருளருண்மறை நூலா அற்புதனுகூலா அட்சயத்திசரேலா காரணக்கிருபாலா கருணைச்செங்கோலா பூரண சீலகுணால மனோல பூ லோக ரட்சக வேலா சரணம் 4. வானவர் துதி செயும் வலமையின் கோவா மட்டிலாத் தயாபா வார்த்தையாமொரு யோவா மேன்மையின் தேவாவேத சாஸ்திரி பாவா ஞான நித்திய ஜீவ திரித்துவ ஞானாதிக்க கிறிஸ்துவே சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Surapathi Susirthaa Nirmala Soroopaa Thotthirath Tholirtheepaa 1. Parama Sangkaartthanam Patthar Sangkeertthanam Pavatthuloga Naeya Thaeva Paalanae Sumanaach Saranam 2. Maadhava Maridharum Manudakumaaraa Vasthirubathaara Makatthuva Athikaaraa Neethippirathaaba Nitthiya Visthaaraa Yaedhamilaadhava Theedha Paraabara Yaesu Naadha Thaveethaa Saranam 3. Aaranap Param Porularunmarai Noolaa Arpudhanukoolaa Atsayatthisaraelaa Kaaranakkirupaalaa Karunaichsengkolaa Poorana Seelakunaala Manola Poo Loga Ratsaka Vaelaa Saranam 4. Vaanavar Thuthi Seyum Valamaiyin Kovaa Mattilaath Thayaapaa Vaartthaiyaamoru Yovaa Maenmaiyin Thaevaavaedha Saasthiri Paavaa Njaana Nitthiya Jeeva Thiritthuva Njaanaathikka Kiristhuvae Saranam