பாடல் #3934
வார்த்தை வடிவாகி
🔤 Vaartthai Vativaaki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே-நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்-தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம் அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே-நீர் அருள் வடிவாக வந்த தேவமகன் துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே-எங்கள் தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம் தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே-நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா-உமது ஆறதலைக் காண வந்த வேளையிலே சத்தியத்து நாயகனாய் வந்தவரே- உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே நித்தியத்து ஜீவனையும் தாருமையா-இயேசு நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthai Vativaaki Indha Ulakatthilae-nammai Vaazhavaikka Vandha Yesu Naayakanae Njaana Vilakkaerri Ingkae Paatukirom-thaeva Raajjiyatthaith Thaeti Ingkae Naam Varuvom Anpu Valai Veesi Emmai Aantidavae-neer Arul Vativaaga Vandha Thaevamakan Thunbach Sumai Neekka Vandha Paeroliyae-enggal Thooyavarae Ummaip Paninthu Paatukirom Thanthai Ummaich Sinthaiyilae Aerridavae-naalum Thaetukindra Ullanggalo Koti Ingkae Anpu Vellam Peruki Ingkae Paayudhappaa-umathu Aarathalaik Kaana Vandha Vaelaiyilae Satthiyatthu Naayakanaay Vandhavarae- Ulakach Sarva Valla Devanaaki Nindravarae Nitthiyatthu Jeevanaiyum Thaarumaiyaa-yesu Naayakanae Manamiranthu Vaentukinrom