பாடல் #39339
அருள் பராபரனெனும்
🔤 Arul Paraabaranenum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருள் பராபரனெனும் ஏசுநாதா சீயோன் ஐயை மகிழ்ந்து தினம் பணிபாதா. தருமறை யுயர் சுவிசேட போதா நித்திய சயந்தறாஞ் சயம்புரை கயந்திடரே புரிந்து பயந்துடர் மானிடர்க்கு நயந்தரு மேசியாவே, 1. வேதத்தை முற்றும் நிறைவேற்றினையே நரர் வேடமதாக உரு மாற்றினையே நிதத்துபதே சங்கள் சாற்றினையே சொன்ன நெறியுடனொழு கியும் வெறி வினையகலிட மறியென விடர்படு திரிமுதலவனே - அருள் 2. மெய்யான தெய்வமுனை அடுத்தேனே லோக விக்கிரகமாயை யெல்லாம் தடுத்தேனே பொய்யான பேய்களைக் கைவிடுத்தேனே உயர் புத்தியின் கண் கொண்டுன் வேத சத்தியங் கண் டேனுனக்கு நித்திய சங்கீர்த்தனமும் துத்தியம் துத்திய முண்டு. 3. சூரியனை யணிந்தான் மணவாளா சுடர் தோன்றும் இருபுறங் கூருள வாளா வீரியச் சுரர் ஊதும் ஏழெக்காளா திகழ் விண்டில மாடிய அண்டர்கள் சேனைகள் தொண்டிடுமா பரமண்டல தேவா 4. நன்மை மிகுந் தேவாதி அருள்பாலா வேத நாயகன் தமிழினுக் கனுகூலா தொன்மை மெய்ச் சத்தியத்தினுயர் சீலா வெறி துக்கத்திடர் வினையொக்கக் கெடவருள் மிக்கப் பரன் வல பக்கத் தணுகிய - அருள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arul Paraabaranenum Aesunaathaa Seeyon Aiyai Makizhnthu Thinam Panipaathaa. Tharumarai Yuyar Suvisaeda Pothaa Nitthiya Sayandharaanj Sayampurai Kayanthidarae Purinthu Payanthudar Maanidarkku Nayandharu Maesiyaavae, 1. Vaedhatthai Murrum Niraivaerrinaiyae Narar Vaedamathaaga Uru Maarrinaiyae Nidhatthubathae Sanggal Saarrinaiyae Sonna Neriyudanozhu Kiyum Veri Vinaiyakalida Mariyena Vidarpatu Thirimudhalavanae - Arul 2. Meyyaana Theyvamunai Atutthaenae Loga Vikkirakamaayai Yellaam Thatutthaenae Poyyaana Paeykalaik Kaivitutthaenae Uyar Putthiyin Kan Kontun Vaedha Satthiyang Kan Taenunakku Nitthiya Sangkeertthanamum Thutthiyam Thutthiya Muntu. 3. Sooriyanai Yaninthaan Manavaalaa Sudar Thonrum Irupurang Koorula Vaalaa Veeriyach Surar Oothum Aezhekkaalaa Thigazh Vintila Maatiya Andarkal Saenaigal Thontitumaa Paramandala Thaevaa 4. Nanmai Mikun Thaevaathi Arulpaalaa Vaedha Naayakan Thamizhinuk Kanukoolaa Thonmai Meych Satthiyatthinuyar Seelaa Veri Thukkatthidar Vinaiyokkak Kedavarul Mikkap Paran Vala Pakkath Thanukiya - Arul