பாடல் #39338
சித்தமிரங்குவாய் நீயையா
🔤 Sitthamirangkuvaay Neeyaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சித்தமிரங்குவாய் நீயையா யெந் நாளுமுந்தன் சித்த மிரங்குவாய் நீயையா. சித்தமிரங்கு வாயையா நித்திய செங்கோலின் கையா துத்தியஞ் செய்தேன் மேசையா கத்தனேயேசு நாதையா - சித்தம் 1. அத்தனார் தந்திருப்பாலா அடியர்களுன் பத்தர் பரிபாலனுகூலா சத்திய வேதாகம நூலா தாவீதுராஜ உத்தம யோக்கிய மனுவேலா சுத்த சுவிசேடத் தத்துவா முற்றொ ழிற்றிரித்தவ சத்துவா புத்திர பரம்பரைக்குக் கொத்தடிமை நானுமக்கு - சித்தம் 2. அர்ச்சய தேவாதி தேவே அனாதிகால உச்சிதப பிரமானந்த வாழ்வே நிச்சய வானத்தின் மன்னாவே நிதான சாலேம் சற்சன ஆ தீன கோவே மிச்சமாய் வீண் காலம் போனேன் துச்சலகை கைக் குள்ளானேன் பட்சமாய் எனைக் கண் பார்த்து இரட்சித்துக் கொள்வாய் தற்காத்து - சித்தம் 3. விந்தை சேர் மெஞ்ஞான சாஸ்திரனே வேதநாயகன் சந்தத சங்கீத கீர்த்தனனே சுந்தர இஸ்ரவேல் கோத்திரனே சுரர் சிறந்து வந்தனை புரிந்த தோத்திரனே தந்தையே யனாதி பிதா மைந்தனே யென் யேசுநாதா சிந்தை வைத்துத் தொழுதேனே எந்தவே ளையிலுந்தானே. - சித்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sitthamirangkuvaay Neeyaiyaa Yen Naalumundhan Sittha Mirangkuvaay Neeyaiyaa. Sitthamirangku Vaayaiyaa Nitthiya Sengkolin Kaiyaa Thutthiyanj Seythaen Maesaiyaa Katthanaeyaesu Naathaiyaa - Sittham 1. Atthanaar Thanthiruppaalaa Atiyarkalun Patthar Paripaalanukoolaa Satthiya Vaethaagama Noolaa Thaaveethuraaja Utthama Yokkiya Manuvaelaa Suttha Suvisaedath Thatthuvaa Murro Zhirriritthava Satthuvaa Putthira Parambaraikkuk Kotthatimai Naanumakku - Sittham 2. Arcchaya Thaevaathi Thaevae Anaathikaala Uchsidhapa Piramaanandha Vaazhvae Nicchaya Vaanatthin Mannaavae Nithaana Saalaem Sarsana Aa Theena Kovae Micchamaay Veen Kaalam Ponaen Thucchalakai Kaik Kullaanaen Patsamaay Enaik Kan Paartthu Iratsitthuk Kolvaay Tharkaatthu - Sittham 3. Vinthai Saer Menjnjaana Saasthiranae Vaedhanaayakan Sandhatha Sangkeedha Keertthananae Sundhara Isravael Kotthiranae Surar Siranthu Vandhanai Purindha Thotthiranae Thanthaiyae Yanaathi Pithaa Maindhanae Yen Yaesunaathaa Sinthai Vaitthuth Thozhuthaenae Endhavae Laiyilunthaanae. - Sittham