பாடல் #39337
பாதம் நம்பினனே
🔤 Paadham Nampinanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதம் நம்பினனே கிறிஸ்துவுன் பாதம் நம்பினேனே 1. ஆதி தந்த வேத சுந்தர மானமைந்தாவே அஞ்சல் புரிந்தெந்தனைவந் தாளனந்தாவே 2. தேவசற்பிரசாத நித்திய ஜீவமன்னாவே மேவும் அற்புதமே பரப்பிரம மேயோசன்னாவே 3. ஞானசங்கைவிலாச சம்பிரம ஞான ரஞ்சிதனே பானுதங்கு பிரகாச லங்கிருத பராபரன் சுதனே 4. அரூபரூபசரீரிதற்பர அட்சயபத்தாவே சொரூபதேவ சுபாபநற்பரி சுத்தகர்த்தாவே 5. பத்து லட்சண மகத்துவ திவ்விய பரம ராஜாவே உத்தம தத்துவ மெய் சத்திய திரித்துவத் துன்னத ஈசாவே 6. வாகா ஜீவா தாதா நீகா வாவே மாதேவா யேகாதிபா லாமேலாவே தாவே யேயோவா 7. அந்தானந்தா தந்தாதிந்தா ஆனந்தா ஆனந்தா பந்தா சொந்தா சந்தோடப்படப் பாதார விந்தந்தா 8. பண்பாய் வேத நாயகன்றமிழ்ப் பாட்டுச் சிங்காரி நண்பாய்வந்தா தரிவிசாரி ஞானானுசாரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadham Nampinanae Kiristhuvun Paadham Nampinaenae 1. Aathi Thandha Vaedha Sundhara Maanamainthaavae Anjjal Purinthendhanaivan Thaalananthaavae 2. Thaevasarpirasaadha Nitthiya Jeevamannaavae Maevum Arpudhamae Parappirama Maeyosannaavae 3. Njaanasangkaivilaasa Sampirama Njaana Ranjsidhanae Paanudhangku Pirakaasa Langkirudha Paraabaran Sudhanae 4. Aroobaroobasareeridharpara Atsayapatthaavae Soroobathaeva Supaabanarpari Sutthakartthaavae 5. Patthu Latsana Makatthuva Thivviya Parama Raajaavae Utthama Thatthuva Mey Satthiya Thiritthuvath Thunnatha Eesaavae 6. Vaakaa Jeevaa Thaathaa Neekaa Vaavae Maathaevaa Yaekaathipaa Laamaelaavae Thaavae Yaeyovaa 7. Anthaananthaa Thanthaathinthaa Aananthaa Aananthaa Panthaa Sonthaa Santhodappatap Paathaara Vindhanthaa 8. Panpaay Vaedha Naayakandramizhp Paattuch Singkaari Nanpaayvanthaa Tharivisaari Njaanaanusaari