பாடல் #39335
ஐயாவுன்றிருப் பாதமே
🔤 Aiyaavunrirup Paadhamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயாவுன்றிருப் பாதமே சரணமென் றடுத்தேன் கவலை விடுத்தேன் எய்தாதுயிர் கெடும் ஏழைப் பாவி யென்றனை எப்படியுந் தற்காத்து இரட்சை செய்யுங் கண்பார்த்து இஸ் பரனான கிருபாகரனே சொல் பராபர கோசர மீசுர பூசுர எண்டிசை மண்டிய அண்டர்கள் கண்டடி தெண்டனிடும் புகழ் கொண்டவகண்டித எரி நரகலகைகள் சிரமழிபட வொரு மரிதிரு மகனென வருத விதரசனின் 1. எந்தை சரீரமிலா நாதனே வஸ்துவென் றென திதையத்தில் மகிழ்ந்தேனே சந்ததமுந் தவிது கோனே புகழுஞ் சங்கீத கீர்த்தன சீமானே சிறந்தானே தாபரமான தயாபரனே பிர தாப சுவாப வியாப சலாபதி சம்பன சம்பிரம வும்பர் பரம்பி நி ரம்பிய லங்கிருத சங்கை வளங்கொடு சடமிட லகைபட முடிகட விடுபட நடனமிடு பரம படையினதிபதி யென் 2. எருசலைப் பதிகண்ட கண்காட்சி யன்பா விதையத்தைக் கொண்டருள் விண்ட மாட்சி பரம பூதல நிறை சருவசாட்சி யன்பா பாவிகள் மீட்சிப் பரமாட்சி பாரியுதாரி பராமரி வானதி காரிய காரி நிதாசரியாதரி பக்கிஷனுக் கிரமுக்கிய பராக்கிரம பாக்கிய யோக்கிய வாக்கிய சலாக்கிய பரம கருணை செறிதரும திருவுரைகள் அருளியருள் பொழிவு மருமை மேசியாவென் 3. ஆதியிலே யிருந்த வார்த்தை மனுடவ தார பராபர யே யோவாவே வேதநாயகன் பாலே மேசியா மனாவே மெய்யான வாழ்வருள்செய் கோவே யன்பாவே மேலவர் நாலவர் பரன்முகம் நூன்முகம் மேவு சினேக விவேக வியாபக விற்பன வுற்பன வித்திர விசித்திர வற்புத தற்பர வட்சய திரித்துவ விசையசய வரிய வதிககன மகிமை மிகவுமுடைய வொரு கடவுடிருமகவென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyaavunrirup Paadhamae Saranamen Ratutthaen Kavalai Vitutthaen Eythaathuyir Ketum Aezhaip Paavi Yendranai Eppatiyun Tharkaatthu Iratsai Seyyung Kanpaartthu Is Paranaana Kirupaagaranae Sol Paraabara Kosara Meesura Poosura Entisai Mantiya Andarkal Kandati Thendanitum Pugazh Kondavakantidha Eri Narakalakaigal Siramazhibata Voru Marithiru Makanena Varudha Vidharasanin 1. Enthai Sareeramilaa Naadhanae Vasthuven Rena Thithaiyatthil Makizhnthaenae Sandhathamun Thavithu Konae Pugazhunj Sangkeedha Keertthana Seemaanae Siranthaanae Thaabaramaana Thayaabaranae Pira Thaaba Suvaaba Viyaaba Salaabathi Sambana Sampirama Vumbar Parampi Ni Rampiya Langkirudha Sangkai Valangkotu Satamida Lakaibata Mutigata Vitubata Natanamitu Parama Pataiyinathibathi Yen 2. Erusalaip Pathiganda Kankaatsi Yanpaa Vithaiyatthaik Kondarul Vinda Maatsi Parama Poodhala Nirai Saruvasaatsi Yanpaa Paavigal Meetsip Paramaatsi Paariyuthaari Paraamari Vaanathi Kaariya Kaari Nithaasariyaadhari Pakkishanuk Kiramukkiya Paraakkirama Paakkiya Yokkiya Vaakkiya Salaakkiya Parama Karunai Seridharuma Thiruvuraigal Aruliyarul Pozhivu Marumai Maesiyaaven 3. Aathiyilae Yirundha Vaartthai Manudava Thaara Paraabara Yae Yovaavae Vaedhanaayakan Paalae Maesiyaa Manaavae Meyyaana Vaazhvarulsey Kovae Yanpaavae Maelavar Naalavar Paranmugam Noonmugam Maevu Sinaega Vivaega Viyaabaka Virpana Vurpana Vitthira Visitthira Varpudha Tharpara Vatsaya Thiritthuva Visaiyasaya Variya Vathigakana Makimai Migavumutaiya Voru Katavutirumakaven