பாடல் #39330
தந்தார் தந்தை
🔤 Thanthaar Thanthai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தார் தந்தைப் பதவி சதானந்தன் மெய்ச்சுதன் நமக்குதவி சற்சி தானந்தக் குருநமக் குதவி அந்தாப் பரமாதிந்த சுதந்தர சுந்தரச்சித விந்தைத் திருமுதலார் 1.ஆதித் தயா கிருபாசன்னா மே சையா எமக்குப் பிரசன்னா வேதப் பொருள் முடிவா மன்னா பரஞ் சோதிக் குணா நதி மன்னா சாதி யனைத்து முய்யத் தாமே நடுவராகப் பாதகமே தொலைத்தார் பேதகமோ இலை 2. மனுக்குலத் துதித் தெமைப் புரந்தார் மேல் வானத்திருந் துலகில் வந்தார் அனுக்கிரகித் தனைத்துந் தந்தார் தேவ னாதி பிதாவின் சொந்தத்தார், சனத்திரளே கலங்கிச் சஞ்சலப் படாதேயும் தினச் செபஞ் செய்யும் செய்யும் மனத் துயர் வேண்டாம் 3. சேனையின் கர்த்தர் பிறந்தாரே ஒரு சிலுவை மரத்தி லிறந்தாரே வானுலகத்திற் சிறந்தாரே மோட்ச வாசல் நமக்குத் திறந்தாரே ஆனதெல்லாம் படைத்தார் யாவும் ஆயுத்த மாச்சு ஏனினிக் கவலைதான் ஏழை நராட்களே 4. சத்துருக்களை ஜெயங் கொண்டார் தம் சனத்தின் சிறை யிருப்பைக் கண்டார் பத்தில்லாத பேயின் தொண்டார் செய்த பாதகந் திர மறை விண்டார் இஸ்திரி வித்தவர் எங்கள் குலத்தரசே எந்தத் துரிதங் கணிற் பந்தம் வந்தும் பயமென் 5. மேசியாவின் விளையாட்டு நெல்லை வேதநாயகன் சொன்ன பாட்டு தேசு விளங்கிய மன்றாட்டு நித்திய ஜீவனுக் கானதே தேட்டு தாசப் பிரபல நேசத் திருச் சபையே சந்தப் பிர பந்தம் பாடிச் சந்தோடங் கொண்டாடிக் கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaar Thanthaip Pathavi Sathaanandhan Meychsudhan Namakkudhavi Sarsi Thaanandhak Kurunamak Kudhavi Anthaap Paramaathindha Sudhandhara Sundharachsidha Vinthaith Thirumudhalaar 1.aathith Thayaa Kirupaasannaa Mae Saiyaa Emakkup Pirasannaa Vaedhap Porul Mutivaa Mannaa Paranj Sothik Kunaa Nathi Mannaa Saathi Yanaitthu Muyyath Thaamae Natuvaraagap Paadhakamae Tholaitthaar Paedhakamo Ilai 2. Manukkulath Thuthith Themaip Puranthaar Mael Vaanatthirun Thulakil Vanthaar Anukkirakith Thanaitthun Thanthaar Thaeva Naathi Pithaavin Sondhatthaar, Sanatthiralae Kalangkich Sanjjalap Pataathaeyum Thinach Sebanj Seyyum Seyyum Manath Thuyar Vaentaam 3. Saenaiyin Kartthar Piranthaarae Oru Siluvai Maratthi Liranthaarae Vaanulakatthir Siranthaarae Motsa Vaasal Namakkuth Thiranthaarae Aanathellaam Pataitthaar Yaavum Aayuttha Maachsu Aeninik Kavalaithaan Aezhai Naraatkalae 4. Satthurukkalai Jeyang Kontaar Tham Sanatthin Sirai Yiruppaik Kantaar Patthillaadha Paeyin Thontaar Seytha Paadhakan Thira Marai Vintaar Isthiri Vitthavar Enggal Kulattharasae Endhath Thuridhang Kanir Pandham Vanthum Payamen 5. Maesiyaavin Vilaiyaattu Nellai Vaedhanaayakan Sonna Paattu Thaesu Vilangkiya Manraattu Nitthiya Jeevanuk Kaanathae Thaettu Thaasap Pirapala Naesath Thiruch Sapaiyae Sandhap Pira Pandham Paatich Santhodang Kontaatik Kollum