பாடல் #39329
சந்த தந்தாளிணை
🔤 Sandha Thanthaalinai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்த தந்தாளிணை துணைதான் தாதா அடியனை ஆதரி பரி 1.அந்தர வானொடு புவியுந்தரு காரணனே ஆதிப் பர வெளியே அருள் மிகும் சோதித் திரு வொளியே அடியேனலிந்தேன் மிடியால் மெலிந்தேன் உன தன்புற்று நோக்கியென் றுன்பத்தைத் தீர்த்தருளும் அற்புதமேவு பரப் பிரம தேவனே தாந்தாந் தக செந் தரிகிட தீம் தாந் திரி நாதிரிகிட தில்லானா தாந்தாம் தரிகிட தீம் திரு டெகு டகுச் செணு சுகிர்தத் ததிங் கண தோம் - சந் 2. புத்தியிலா தலைமிருகத்திலுங்கேடானேன் பூமியின் பாரத்திலே அழுந்திய காமவிகாரத்தினால் புலையே புரிந்தேன் நிலையே பிரிந்தேன் கன புண்ணியனே திருக் கண்ணோடு பார்த்துனின் புத்திரனுக்காயிந்த சத்துருவைக் காத்தருள்வாய் 3. அந்திபகல் அனுதினமுந்துயரமுறுதே அஞ்சல் செய்வாரிலையே அடையலர் வஞ்சகம் தீரலையே அகலா தலகை இகலேசெய்யுதே நிதம் ஆதரித்தன்புடன் பாதுகாத் தெந்தனை ஆண்டருளும் சுவாமி வேண்டிக்கொள்ளுகிறேன் 4. தஞ்சமுனாதர வருள் எஞ்சலிலாதசமு தாயமன்றாட்டவே நெல்லை வேத நாயகன் பாட்டாவே தருவாய்திடனே வருவாய் உடனே வந்து தப்பாமற் காத்தருளும் இப்போதும் எப்போதும் சங்கீர்த்தனம் வந்தனம் கிறிஸ்தேசுவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sandha Thanthaalinai Thunaithaan Thaathaa Atiyanai Aadhari Pari 1.andhara Vaanotu Puviyundharu Kaarananae Aathip Para Veliyae Arul Mikum Sothith Thiru Voliyae Atiyaenalinthaen Mitiyaal Melinthaen Una Thanpurru Nokkiyen Runbatthaith Theerttharulum Arpudhamaevu Parap Pirama Devanae Thaanthaan Thaka Sen Tharikida Theem Thaan Thiri Naathirikida Thillaanaa Thaanthaam Tharikida Theem Thiru Teku Takuch Senu Sukirthath Thathing Kana Thom - San 2. Putthiyilaa Thalaimirugatthilungkaetaanaen Poomiyin Paaratthilae Azhunthiya Kaamavikaaratthinaal Pulaiyae Purinthaen Nilaiyae Pirinthaen Kana Punniyanae Thiruk Kannotu Paartthunin Putthiranukkaayindha Satthuruvaik Kaattharulvaay 3. Anthibakal Anuthinamunthuyaramuruthae Anjjal Seyvaarilaiyae Ataiyalar Vanjjakam Theeralaiyae Agalaa Thalakai Igalaeseyyuthae Nidham Aadharitthanpudan Paathukaath Thendhanai Aandarulum Suvaami Vaentikkollukiraen 4. Thanjjamunaadhara Varul Enjjalilaadhasamu Thaayamanraattavae Nellai Vaedha Naayakan Paattaavae Tharuvaaythidanae Varuvaay Udanae Vanthu Thappaamar Kaattharulum Ippothum Eppothum Sangkeertthanam Vandhanam Kiristhaesuvae.