பாடல் #39328
வானோர் பாடுஞ் சேயோவா
🔤 Vaanor Paatunj Saeyovaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானோர் பாடுஞ் சேயோவா மகிமைப்பிரதாபா வாதுணைக்கு கானானாட்டுக் கரசதிகாரா கோனார் சேட்டக் குமாரா எனக்கு 1.காலா காலத்தரிய கிருபையே கடிவினை கெடவந்தாயே நரர் கோலத்தேயொளிர் தேவாதிசேயே சாலத்தயவுசெய் நீயே எனக்கு 2. மைந்தர்க்குறவான அதிசய சமத்தே தாவீதின் வங்கிஷத்தே வரு சுந்தரத் தொருகனி யாஸ்திரி வித்தே யெந்தைக் குறை கரிசித்தே எனக்கு 3. அடியேன் மிடியாரிடஞ் சென்று சொல்லவோ அருமை ரட்சக நீ அலவோ பொரு கடிமுடி பட மரித்துயிர்த்தெழும் வலவா கணவனே சலாம் தலைவா எனக்கு 4. வானச் சிங்காரா மகத்துவச் சொரூபா வந்தென் னிடத்திங்கி ருவா திவ்ய ஞான போசனத் துருவா அருவா மேன்மைக் கிருபாசனத் தொருவா எனக்கு 5. வெற்றித் தான மோக்கிஷ வழிகாட்டே வேதநாயகன் பாட்டே அடி பற்றித் தான் தொழ உவந்து கொண்டாட்டே பரிந்து பேசும் மன்றாட்டே எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanor Paatunj Saeyovaa Makimaippirathaapaa Vaathunaikku Kaanaanaattuk Karasathikaaraa Konaar Saettak Kumaaraa Enakku 1.kaalaa Kaalatthariya Kirupaiyae Kativinai Kedavanthaayae Narar Kolatthaeyolir Thaevaathisaeyae Saalatthayavusey Neeyae Enakku 2. Maindharkkuravaana Athisaya Samatthae Thaaveethin Vangkishatthae Varu Sundharath Thorugani Yaasthiri Vitthae Yenthaik Kurai Karisitthae Enakku 3. Atiyaen Mitiyaaridanj Senru Sollavo Arumai Ratsaka Nee Alavo Poru Katimuti Pata Maritthuyirtthezhum Valavaa Kanavanae Salaam Thalaivaa Enakku 4. Vaanach Singkaaraa Makatthuvach Soroopaa Vanthen Nidatthingki Ruvaa Thivya Njaana Posanath Thuruvaa Aruvaa Maenmaik Kirupaasanath Thoruvaa Enakku 5. Verrith Thaana Mokkisha Vazhikaattae Vaedhanaayakan Paattae Ati Parrith Thaan Thozha Uvanthu Kontaattae Parinthu Paesum Manraattae Enakku