பாடல் #39327
நெஞ்சே நீ கலங்காதே நான் என் செய் வேனென்று
🔤 Nenjsae Nee Kalangkaathae Naan En Sey Vaenenru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின் ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் - நெஞ்சே 1.வினை மேல் வினை வந்தாலும் பெண்சாதிபிள்ளை மித்திரர் சத்துரு வானாலும் மனையொடு கொள்ளை போனாலும் வானம் இடிந்து வீழ்ந்தாலும் 2. கவலைகள் மிகக் கொண்டாலும் பிசாசுகளைக் கண்ணின் முன்னே கண்டாலும் எவர்கள் துன்பஞ் செய்தாலும் எதிரிகள் எல்லாம் வைதாலும் 3. ஆதிசற்பம் பொரிந்தாலும் பொல்லாத பேர்கள் அக்கினிபோ லெரிந்தாலும் பாதியுடல் மெலிந்தாலும் பட்டினியே கிடந்தாலும் 4. பட்டையம் பஞ்சம் வந்தாலும் அதிகமான பாடு நோவுகள் மிகுந்தாலும் மட்டிலா வறுமைப் பட்டாலும் மனுஷரெல்லாம் கைவிட்டாலும் 5. சின்னத்தனம் எண்ணினாலும் நன்மை செய்யத் தீமைதானே பண்ணினாலும் பின்ன பேதகஞ் சொன்னாலும் பிசாசு வந்து நாப்பினாலும் 6. கள்ளனென்று பிடித்தாலும் விலங்கு போட்டு காவலில் வைத் தடித்தாலும் வெள்ளம் பிரண்டு தலை மீதிலலை மோதினாலும் 7. வேதநாயகன் எந்நாளும், பதங்கள் பாடும் மேசியா வந்துன்னை யாளும் ஏதித சத்தியச் சொல்வோ இயேசு உன் ரட்சகரல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjsae Nee Kalangkaathae;-seeyon Malaiyin Ratsakanai Maravaathae;-naan En Seyvaenenru. Vanjjar Pakai Seythaalum, Vaaraa Vinai Peythaalum - Nenjsae 1.vinai Mael Vinai Vanthaalum Pensaathipillai Mitthirar Satthuru Vaanaalum Manaiyotu Kollai Ponaalum Vaanam Itinthu Veezhnthaalum 2. Kavalaigal Migak Kontaalum Pisaasugalaik Kannin Munnae Kantaalum Evarkal Thunbanj Seythaalum Ethirigal Ellaam Vaithaalum 3. Aathisarpam Porinthaalum Pollaadha Paerkal Akkinipo Lerinthaalum Paathiyudal Melinthaalum Pattiniyae Kidanthaalum 4. Pattaiyam Panjjam Vanthaalum Athigamaana Paatu Novugal Mikunthaalum Mattilaa Varumaip Pattaalum Manusharellaam Kaivittaalum 5. Sinnatthanam Enninaalum Nanmai Seyyath Theemaithaanae Panninaalum Pinna Paedhakanj Sonnaalum Pisaasu Vanthu Naappinaalum 6. Kallanenru Pititthaalum Vilangku Pottu Kaavalil Vaith Thatitthaalum Vellam Pirantu Thalai Meethilalai Mothinaalum 7. Vaedhanaayakan Ennaalum, Pathanggal Paatum Maesiyaa Vanthunnai Yaalum Aethidha Satthiyach Solvo Yesu Un Ratsakarallo