பாடல் #39323
உன்னதப் பரமனின் ஒருமகனே
🔤 Unnathap Paramanin Orumakanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதப் பரமனின் ஒருமகனே அரு ளொளி விடு திருமுகனே பன்னிருபிதாக்களும் முன்னிருமுதாக்களும் மன்னரும் சீஷாக்களும் பரிவுட னடி தொழ எருசலை நகரெழு பர நர குருபர 1.நித்திய அதிசய நேய கிருபையா நெறி நிறை மறை மேசியா சத்திய தயா பர உத்தம குணாகர தத்துவ மனோகர தயவு செய் பரிவு செய் தமியனை யடிமை கொள் சருவ வல்லப பர 2. தந்திர அலகைகள் சதியறவே வரு தருபர கதி பெறவே மந்திர ஜெப தவ சுந்தர அதிநவ வந்தனை செய வருள் மனுடகுமாரனென அனை மரி யிடம் வரு மனு வேலட்சய பர 3. மங்கள சுப சுவி சேட கவி நேயா மகத்துவப் பரம ராயா இங்கிதப் பிரகாசா சங்கையின் சர்வேசா எங்களிதய வாசா இனி நடு விடவரு கன வலமை மகிமை யேசு ஞாயாதி பதி உன்னத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathap Paramanin Orumakanae Aru Loli Vitu Thirumuganae Pannirupithaakkalum Munnirumuthaakkalum Mannarum Seeshaakkalum Parivuda Nati Thozha Erusalai Nakarezhu Para Nara Kurubara 1.nitthiya Athisaya Naeya Kirupaiyaa Neri Nirai Marai Maesiyaa Satthiya Thayaa Para Utthama Kunaagara Thatthuva Manogara Thayavu Sey Parivu Sey Thamiyanai Yatimai Kol Saruva Vallapa Para 2. Thanthira Alakaigal Sathiyaravae Varu Tharubara Kathi Peravae Manthira Jeba Thava Sundhara Athinava Vandhanai Seya Varul Manudakumaaranena Anai Mari Yidam Varu Manu Vaelatsaya Para 3. Manggala Suba Suvi Saeda Kavi Naeyaa Makatthuvap Parama Raayaa Ingkidhap Pirakaasaa Sangkaiyin Sarvaesaa Enggalidhaya Vaasaa Ini Natu Vidavaru Kana Valamai Makimai Yaesu Njaayaathi Pathi Unnatha