பாடல் #39322
சாமி நீ கிருபை
🔤 Saami Nee Kirupai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமி நீ கிருபை நேமியென்றிருந்தும் இன்னஞ் சமையஞ் செய்வது மென்ன 1.பூமிநரர் வானவரும் பூகழெருசலேம் வளர் புங்கமே யூதர் கோத்திரச் சிங்கத்துரையே நாம கீர்த்தனப் பிரதாப ஓமனாதிக் கிறிஸ்து நாதனே யிதேதுவாது பேதகஞ் செய்யத் தகாது 2. விண்ணீடுந் தேவர்களும் மண்ணாளும் வேந்தர்களும் மிக்க பணிவாய்ப் பணியும் பக்கிஷ பதியே பெண்ணேவை மக்கள் நாங்கள் கண்ணீர்க் கணவாயினில் பெருமூச் செரிந்து சென்று பரதபிக்கிறோம் நின்று 3. வேதமே எனக்குனது பாதமே கதியல்லாது வேறு தவியா ருமில்லை தேறுதல் செய்வாய் தாதையே எந்தனைக் கை விடாதேயும் கிருபை மேசியா சந்தத மனந்த னந்தம் வந்தனம் ஏசு நாதையா 4. தாயகமா யெண்ணி வேத நாயகன் சங்கீதம் பாடும் சத்திய கிறிஸ்தனாதி நித்திய குமரா பேயுமே சீறுமுலகும் பாயுமே மேதையுங் கூட சாயுமே மூவாசைகளில் மாயுமே ஞாயமே செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saami Nee Kirupai Naemiyenrirunthum Innanj Samaiyanj Seyvathu Menna 1.poominarar Vaanavarum Poogazherusalaem Valar Punggamae Yoodhar Kotthirach Singgatthuraiyae Naama Keertthanap Pirathaaba Omanaathik Kiristhu Naadhanae Yithaethuvaathu Paedhakanj Seyyath Thakaathu 2. Vinneetun Thaevarkalum Mannaalum Vaendharkalum Mikka Panivaayp Paniyum Pakkisha Pathiyae Pennaevai Makkal Naanggal Kanneerk Kanavaayinil Perumooch Serinthu Senru Parathapikkirom Ninru 3. Vaedhamae Enakkunathu Paadhamae Kathiyallaathu Vaeru Thaviyaa Rumillai Thaerudhal Seyvaay Thaathaiyae Endhanaik Kai Vitaathaeyum Kirupai Maesiyaa Sandhatha Manandha Nandham Vandhanam Aesu Naathaiyaa 4. Thaayakamaa Yenni Vaedha Naayakan Sangkeedham Paatum Satthiya Kiristhanaathi Nitthiya Kumaraa Paeyumae Seerumulakum Paayumae Maethaiyung Kooda Saayumae Moovaasaigalil Maayumae Njaayamae Seyyum