பாடல் #39321
தேவ தேவொரேக வஸ்து
🔤 Thaeva Thaevoraega Vasthu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவொரேக வஸ்து தேவ நாமனா கிறிஸ்து தேவ னாதி ஓம் நமா. ஜீவ ஆவியே யோவா அல் பாவொமே கா நமஸ்து 1.மூவரா யரூபியாய் முன் ஊழியூழி காலம் வாழ் பாவ தாழ்விலாவலாப ராபரா தயாபரா ஒரு 2. ஆதியாய னாதியாய் அரூபரூப ரூபமாய் நீதிஞாய நேர்மையாய் நீ டூழியாள் சுயாதிபா ஒரு 3. மாசில்லாத கிருபை வாச மட்டில்லாத நன்மையே தேசுலாவ னாதி ரட்சகா சிறந்த உண்மையே 4. ஈறில்லா மெய் ஞான ஜோதி யேயனந்த னந்தமே மாறிலா தனுக்கிரகஞ் செய் வருபதார விந்தமே ஒரு 5. வெல்லை யூரி னெல்லை மீது செல்லு மேரு சல்லையா நெல்லை யூரன் சொல்லிலே நிரந்தரா வரந்தராய் ஒரு சேனையின் கர்த்தாதி கர்த்தா நமஸ்து நமஸ்தே நமஸ்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thaevoraega Vasthu Thaeva Naamanaa Kiristhu Thaeva Naathi Om Namaa. Jeeva Aaviyae Yovaa Al Paavomae Kaa Namasthu 1.moovaraa Yaroopiyaay Mun Oozhiyoozhi Kaalam Vaazh Paava Thaazhvilaavalaaba Raabaraa Thayaabaraa Oru 2. Aathiyaaya Naathiyaay Aroobarooba Roobamaay Neethinjaaya Naermaiyaay Nee Toozhiyaal Suyaathipaa Oru 3. Maasillaadha Kirupai Vaasa Mattillaadha Nanmaiyae Thaesulaava Naathi Ratsakaa Sirandha Unmaiyae 4. Eerillaa Mey Njaana Jothi Yaeyanandha Nandhamae Maarilaa Thanukkirakanj Sey Varubathaara Vindhamae Oru 5. Vellai Yoori Nellai Meethu Sellu Maeru Sallaiyaa Nellai Yooran Sollilae Nirandharaa Varandharaay Oru Saenaiyin Kartthaathi Kartthaa Namasthu Namasthae Namasthu