பாடல் #39317
தேவ சுதனொரு
🔤 Thaeva Sudhanoru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சுதனொரு மெய்த்தேவே பர (2) சிற்பர தற்பர மாவுருவே சேவடி மிக்கா தினசரணே தயாபரா. 1.தாவீதி னெழின் முடியரசே யுவர் (2) தானவர் தொழு மதிசயமே சா லேம் ரா ஜே தவறா தெனையாள் பிரவை யோனே தாயுனுரிமையே தூய கிருபையே ததியுனதருள் புரி. காம பமகரி சஸ்சரி சரி (2) கக்கரி மம்மரி காகசரி காகரி கத்தா பமகரிசா ரிசா சசா பாத பாமக ரிகம ரிகா கம (2) ரி கமபம கரி சரி சா ரீகா மா பா மதபா மபமா கம காரி பா தனிசரிசா ரீ நிசதனிபா மதபம கரிசரி காம 2. ஆதி நரர் கருவத்தாலே தலை (2) அற்புத உற்பவ மாய் மரிபால் ஆரணியத்தே முன்னணையி லோரிராவிலே வேதிய ரெழுதியபடியே மறை (2) மேதினி வரு திருவடி வே மே சை யா வே விரசாய் வருவாய் தருவாயே மீள வெனையுமே ஆள நினையுமே வெலை நகரதிபதி-காம-தேவ 3. வாடி மனதுரு கித்தானே முகம் (2) மற் பொரு துற்கடி சோதனைமேல் வாதை மிகுத்தே எதிரிகளால கோரமாய்ப் பாடுகள் பட முடிவதுவோ கன (2) பாதகர் கொடுமைகள் வலிதே பாழா காதே பரமே பரமே அருள் பாரே பாவி பணிகிறேன் தாவியணைகிறேன் பரிவுடனருள்புரி-காம-தேவ 4. சாதிகளுட மதத்தாலே பல (2) சத்திய உத்தம பாதையிலே சால நடக்கா திடர்புரி வாரனீதமே ஏதவர் முழு இருதயமே அறி (2) யீன நர கிருளின் மயமே யீடேறார் மேல் இசரே லரசே கிருபை கூரே யேர் திருநெல்லையான் நேர்தரு கவியான் இனி நடுவிட வரும்-காம-தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Sudhanoru Meytthaevae Para (2) Sirpara Tharpara Maavuruvae Saevati Mikkaa Thinasaranae Thayaabaraa. 1.thaaveethi Nezhin Mutiyarasae Yuvar (2) Thaanavar Thozhu Mathisayamae Saa Laem Raa Jae Thavaraa Thenaiyaal Piravai Yonae Thaayunurimaiyae Thooya Kirupaiyae Thathiyunatharul Puri. Kaama Pamakari Sassari Sari (2) Kakkari Mammari Kaagasari Kaagari Katthaa Pamakarisaa Risaa Sasaa Paadha Paamaka Rigama Rikaa Kama (2) Ri Kamapama Kari Sari Saa Reekaa Maa Paa Mathapaa Mapamaa Kama Kaari Paa Thanisarisaa Ree Nisathanipaa Mathapama Karisari Kaama 2. Aathi Narar Karuvatthaalae Thalai (2) Arpudha Urpava Maay Maripaal Aaraniyatthae Munnanaiyi Loriraavilae Vaethiya Rezhuthiyapatiyae Marai (2) Maethini Varu Thiruvati Vae Mae Sai Yaa Vae Virasaay Varuvaay Tharuvaayae Meela Venaiyumae Aala Ninaiyumae Velai Nakarathibathi-kaama-thaeva 3. Vaati Manathuru Kitthaanae Mugam (2) Mar Poru Thurkati Sodhanaimael Vaathai Mikutthae Ethirigalaala Koramaayp Paatugal Pata Mutivathuvo Kana (2) Paadhakar Kotumaigal Valithae Paazhaa Kaathae Paramae Paramae Arul Paarae Paavi Panikiraen Thaaviyanaikiraen Parivudanarulpuri-kaama-thaeva 4. Saathigaluda Mathatthaalae Pala (2) Satthiya Utthama Paathaiyilae Saala Natakkaa Thidarpuri Vaaraneedhamae Aedhavar Muzhu Irudhayamae Ari (2) Yeena Nara Kirulin Mayamae Yeetaeraar Mael Isarae Larasae Kirupai Koorae Yaer Thirunellaiyaan Naertharu Kaviyaan Ini Natuvida Varum-kaama-thaeva