பாடல் #39315
தேவ தேவனே எகோவா
🔤 Thaeva Devanae Ekovaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவனே எகோவா வா வென் ஜீவனே. காவலர்க் குப தேசனே கன பாவிகட்கதி நேசனே உயர் கர்த்தனேக திரித்துவ ஞான மகத்துவ ராஜ கிறிஸ்துவே பர 1.அந்தமேனியே கனம் பெரும் அனந்த ஞானியே விந்தை மானியே சுதந்தர மிகுந்த தானியே தந்தை யார்தர வந்தவா பசு மந்தையூடு பிறந்தவா கதி தந்த வா சொலு வந்தவா மெய் சிறந்தவா விண்ணெழுந்த வா திவிய 2. சத்திய வாசனே யூதர்குல தவீது ராஜனே நித்தியநேசனே அடியவர் நிலைமை யீசனே பத்தருக்குப காரனே வளர் பெத்தலைக்கதிகாரனே கன பாரனே அதிதீரனே நல்லு தாரனே பெல வீரனே ஜெய 3. யேசுநாதனே எளியவர்க்கிரங்கும் நீதனே மாசிலாதனே திருமறை வகுத்த போதனே நேச ஒப்பர வானனே உரை பேசுதற்கரி தானனே தவ நித்தனே எமதத்தனே பரி சுத்தனே யொருகத்தனே வல 4. வானசீலனே மனுவுருவானமூலனே ஞான பாலனே அதிசய நன்மை நூலனே பானுவேல் மனுகோலனே திரு மானுவே லனு கூலனே கன பத்தியே தரு துத்தியமே நெடு நித்திய மாய் வளர் வஸ்துவே யொரு 5. தூதராடவே அனைமரி மாது நாடவே நீதர் தேடவே இடையரும் பாதைகூடவே வேதநாயகன் பாடவே கண பூதகூளிகள் ஒடவே ஒளி மீட்டவே வழிகாட்டவே அரு ளீட்டவே மறை தீட்டவே வரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Devanae Ekovaa Vaa Ven Jeevanae. Kaavalark Kuba Thaesanae Kana Paavigatkathi Naesanae Uyar Kartthanaega Thiritthuva Njaana Makatthuva Raaja Kiristhuvae Para 1.andhamaeniyae Kanam Perum Anandha Njaaniyae Vinthai Maaniyae Sudhandhara Mikundha Thaaniyae Thanthai Yaarthara Vandhavaa Pasu Manthaiyootu Pirandhavaa Kathi Thandha Vaa Solu Vandhavaa Mey Sirandhavaa Vinnezhundha Vaa Thiviya 2. Satthiya Vaasanae Yoodharkula Thaveethu Raajanae Nitthiyanaesanae Atiyavar Nilaimai Yeesanae Pattharukkuba Kaaranae Valar Petthalaikkathikaaranae Kana Paaranae Athitheeranae Nallu Thaaranae Pela Veeranae Jeya 3. Yaesunaadhanae Eliyavarkkirangkum Needhanae Maasilaadhanae Thirumarai Vakuttha Podhanae Naesa Oppara Vaananae Urai Paesudharkari Thaananae Thava Nitthanae Emathatthanae Pari Sutthanae Yorugatthanae Vala 4. Vaanaseelanae Manuvuruvaanamoolanae Njaana Paalanae Athisaya Nanmai Noolanae Paanuvael Manukolanae Thiru Maanuvae Lanu Koolanae Kana Patthiyae Tharu Thutthiyamae Netu Nitthiya Maay Valar Vasthuvae Yoru 5. Thoodharaadavae Anaimari Maathu Naadavae Needhar Thaedavae Itaiyarum Paathaikoodavae Vaedhanaayakan Paadavae Kana Poodhakooligal Odavae Oli Meettavae Vazhikaattavae Aru Leettavae Marai Theettavae Varu