பாடல் #39314
எந்தையே யனாதி வஸ்துவே
🔤 Enthaiyae Yanaathi Vasthuvae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தையே யனாதி வஸ்துவே ஓசியன்னாவே இரட்சியும் ஏசுக்கிறிஸ்துவே. 1.சுந்தரத் தேவாதி குமரா சுயாதிகாரா தோற்றிய மானிடவதாரா. - எந்தை 2. ஆறு லட்சண சொரூபியே சருவவியாபி அனந்த நன்மைப் பிரதாபியே. - எந்தை 3. அம்பரா அனாதி இரட்சகா ஓகோகோ காவா அகிலத் தொன்றான ரட்சகா. - எந்தை 4. ஆதியிலிருந்த சத்தமே ஆதமேவாளுக் களித்தத் திருவாக் குத்தத்தமே. - எந்தை 5. அற்புதத் திரித்துவ மெய்த் தேவேயே யேயோவாவே ஆண்டவா மாதேவா காவாவே. - எந்தை 6. பாவிகட்கிரங்கு மேசையா தேவாதி சேயா பக்கிஷக் கிருபைக் கண்பார் துய்யா. - எந்தை 7. சந்ததம் வந்தனம் வந்தனம் ஓ நித்தியானந்தம் சமஸ்த சங்கீர்த்தனம் ஏசுவே. - எந்தை 8. நெல்லை வேதநாயகன் பாட்டை அடியார் மன்றாட்டை நித்தியம் கேட்டருள் பாராட்டே. - எந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enthaiyae Yanaathi Vasthuvae Osiyannaavae Iratsiyum Aesukkiristhuvae. 1.sundharath Thaevaathi Kumaraa Suyaathikaaraa Thorriya Maanidavathaaraa. - Enthai 2. Aaru Latsana Soroopiyae Saruvaviyaapi Anandha Nanmaip Pirathaapiyae. - Enthai 3. Ambaraa Anaathi Iratsakaa Okoko Kaavaa Akilath Thonraana Ratsakaa. - Enthai 4. Aathiyilirundha Satthamae Aadhamaevaaluk Kalitthath Thiruvaak Kutthatthamae. - Enthai 5. Arpudhath Thiritthuva Meyth Thaevaeyae Yaeyovaavae Aandavaa Maathaevaa Kaavaavae. - Enthai 6. Paavigatkirangku Maesaiyaa Thaevaathi Saeyaa Pakkishak Kirupaik Kanpaar Thuyyaa. - Enthai 7. Sandhatham Vandhanam Vandhanam O Nitthiyaanandham Samastha Sangkeertthanam Aesuvae. - Enthai 8. Nellai Vaedhanaayakan Paattai Atiyaar Manraattai Nitthiyam Kaettarul Paaraattae. - Enthai