பாடல் #39311
தந்தை சருவேஸ்பரனே
🔤 Thanthai Saruvaesparanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன்யேசுவுக்காய் எந்தன்முகம் பார்த்திரங்குவாயே இம் மாத்திரம் நீயே எந்தன் முகம் பார்த்திரங்குவாயே 1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தையருள் மேவும் அசரீரி மெய்ஞான வாரி - தந்தை 2. ஞானபரனே யொருத்துவ மான முதலே திரித்துவ மேன்மை வடி வான மகத்துவம் மேலான தத்துவம் - தந்தை 3. விற்பன விவேகநூலா அற்புதம தானசீலா நற்பரம லோக அனு கூலா நன்மைக் கிருபாலா -தந்தை 4. ஆதிமுதலான நேசா, வேதமறை மீதுலாசா பேதகமில்லாத சத்தியவாசா, ஞானப்பிரகாசா - தந்தை 5. வந்த வினை யாவுந் தீரும் நிந்தை யணுகாமல் காரும் சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர் பாதந் தாரும் - தந்தை 6. ஏட்டுத் திரளாகக் கூட்டி நீட்டுப் புகழாகத் தீட்டிப் பாட்டுச் சொல்லும் வேதநாயகன் கொண்டாட்டுக் கிட்டு - தந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthai Saruvaesparanae Undhan Makanyaesuvukkaay Endhanmugam Paartthirangkuvaayae Im Maatthiram Neeyae Endhan Mugam Paartthirangkuvaayae 1.andhamathilaa Akaari Sandhathamumae Visaari Vinthaiyarul Maevum Asareeri Meynjaana Vaari - Thanthai 2. Njaanaparanae Yorutthuva Maana Mudhalae Thiritthuva Maenmai Vati Vaana Makatthuvam Maelaana Thatthuvam - Thanthai 3. Virpana Vivaeganoolaa Arpudhama Thaanaseelaa Narparama Loga Anu Koolaa Nanmaik Kirupaalaa -thanthai 4. Aathimudhalaana Naesaa, Vaedhamarai Meethulaasaa Paedhakamillaadha Satthiyavaasaa, Njaanappirakaasaa - Thanthai 5. Vandha Vinai Yaavun Theerum Ninthai Yanukaamal Kaarum Sinthai Makizhnthae Kannaalae Paarum Seer Paadhan Thaarum - Thanthai 6. Aettuth Thiralaagak Kootti Neettup Pugazhaagath Theettip Paattuch Sollum Vaedhanaayakan Kontaattuk Kittu - Thanthai