பாடல் #39305
வந்தனம் வந்தன மேசையா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
வந்தனம் வந்தன மேசையா கிறிஸ் தேசையா சந்ததஞ் சந்ததந் துத்தியம் வந்தனந் தானுமக்கே சுந்தரமாய்க் கொண்டருளும் தந்தை திரு மகனே எந்தாயகனே வியாபகனே கிருபை முகனே கிருபை முகனே கிறிஸ் தேசு நாயகனே 1.அந்தரம் புவியுஞ் சுந்தரமுட னமைத்த அட்சய தேவ திரித்துவம் முந்து மனுடர் கணிற்பந்த மகல வந்த முக்கியப் பிரதாப மகத்து வம் தந்தைப் பிதாவினுட விந்தைக் குமாரனாகத் தானே யுதித்த சத்துவம் மைந்தர் மேல் கருணை வைத்த நிந்தையனைத்துஞ் சயித்த இந்த உலகிலுதித்த எந்தையார் வாக்குத் தத்தம் பிரிய சித்தம் உரிமைப் பத்தம் மாபரி சுத்தம் மாபரி சுத்தம் வானவன் சத்தம் 2. சாதியாலுண்டாகும் பேதகங்களு மன வாதையு மெளி தாமோ பாதகப் பசாசின் சோதனையில் மெலிந்து பரதவிக்கவும் போமா மாதர் மக்கள் பிரவஞ்ச வாழ்வனைத்தும் மாயமல்லோ சீமா வேதப் பொருளே கோமா நீதித்தவிது பூமா போதத்துரிய சேமா தாதை யேசு நாமா உபத்திரமா மிக வருமா பராமுகமா பரா முகமா பராபர வஸ்தோம் நமா 3. தாயின் கருப்பத்தெனை நேயமாகக் காத்து தாங்கிக் கருணை யூட்டி மாய வுலகினாலும் பேயினாலும் வந்த வறுமை யனைத்து மோட்டி ஞாய நெறியோ டெனைத் தூய சபையில் வேத நாயகனென நாட்டி ஆயனாகக் கூட்டிப்போய் நல்வழியைக் காட்டித் தீய பகையை மாட்டிச் சகாயமாய்த் தீட்டி சீராட்டிக் கிருபைப் பாராட்டி முடிசூட்டி முடி சூட்டி வைத்த முதல்வா மூவுலகாட்டி