பாடல் #39303
தேவா பர கிறிஸ்து
🔤 Thaevaa Para Kiristhu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா பர கிறிஸ்து தேவா பர தேவா பர 1.சீவா தற்பர யோவா அற்புத சிந்தைப் பிரானேசா மூவாளொத்த சொரூபா பாவா காவா நசரேசா கிறிஸ்து - தேவா 2. நேசக் கிருபாலா யேசிசரேலா தாசர்க்கனு கூலா ஆசைக்கணாளா அன்பா தோழா நண்பா மணவாளா கிறிஸ்து - தேவா 3. வானத் திறைவன் மேன்மைப் பரமன் சேனைத் திரளோனே ஞானக் குரவன் நசரேத்தானே நம்முட பெருமானே கிறிஸ்து - தேவா 4. நித்தா ஞானப்பர்த்தா கர்த்தா நித்திய பரிசுத்தா அத்தா தேவதத்தா சீர்பா தத்தா கரிசித்தாள் கிறிஸ்து - தேவா 5. நித்திய சீவன்நீயே பாதையும் நீயே சத்தியமே பத்தனையுத்தம சித்த மிகுந்தே வைத்தாதரி நயமே கிறிஸ்து - தேவா 6. மட்டில்லா வானச் சேனைகளும் பூதலர் பாதலருஞ் சிட்டும் பாடுது திருநெல்லைப்பதி யானும் பாடுகிறான் கிறிஸ்து - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Para Kiristhu Thaevaa Para Thaevaa Para 1.seevaa Tharpara Yovaa Arpudha Sinthaip Piraanaesaa Moovaalottha Soroopaa Paavaa Kaavaa Nasaraesaa Kiristhu - Thaevaa 2. Naesak Kirupaalaa Yaesisaraelaa Thaasarkkanu Koolaa Aasaikkanaalaa Anpaa Thozhaa Nanpaa Manavaalaa Kiristhu - Thaevaa 3. Vaanath Thiraivan Maenmaip Paraman Saenaith Thiralonae Njaanak Kuravan Nasaraetthaanae Nammuda Perumaanae Kiristhu - Thaevaa 4. Nitthaa Njaanappartthaa Kartthaa Nitthiya Parisutthaa Atthaa Thaevathatthaa Seerpaa Thatthaa Karisitthaal Kiristhu - Thaevaa 5. Nitthiya Seevanneeyae Paathaiyum Neeyae Satthiyamae Patthanaiyutthama Sittha Mikunthae Vaitthaadhari Nayamae Kiristhu - Thaevaa 6. Mattillaa Vaanach Saenaigalum Poodhalar Paadhalarunj Sittum Paatuthu Thirunellaippathi Yaanum Paatukiraan Kiristhu - Thaevaa