பாடல் #39302
விந்தையாக வந்த மேசையாவே
🔤 Vinthaiyaaga Vandha Maesaiyaavae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விந்தையாக வந்த மேசையாவே உந்தன் மீதிலாசை கொண்டேனேசையாவே தந்தை மனுடர்கணிற் பந்தமகலத் தந்த தாவீதரசன் றொழுந் தேவ திருக்குமாரா - விந் 1.உலக மயக்கத் தினிலடுத் தேனே யெனக் குற்ற நாளெல்லாம் வீண்விடுத்தேனே நிலை கெடாதெனைக் கண்பாரு மிகுமுதாரி நீயே யென்னுபகாரி நீயே கிருபைவாரி. - விந் 2. பேயுலகுடல் மூன்றும் பகை செய்யுதே யென்மேற் பெலக்க அக்கினிஅம்புகளை யெய்யுதே நேய மிகுந்த வெனதாற்றும் மணவாளனே நித்த முனதிரக்கம் வைத்தாள் கிருபையாளனே - விந் 3. கொடிய தீவினைக் கெந்தனைக் காருந்தேவ கோபஞ் சாபமனைத்தையுந் தீரும் அடலுக்கஞ்சிக் கெஞ்சிப் பஞ்சரிக்கு தென் னெஞ்சம் அஞ்சல் செய்யுமுமக்கபைய மபையந் தஞ்சம் - விந் 4. தங்கு கிருபையினுத்தம நேசா வானோர் சங்கம் கனஞ்செய்யும் சங்கையின் ராசா துங்க இசறாவேலர் வங்கிஷப் பிரவடீகா துலங்கு தெய்வ சொரூபா மிலங்கு மற்புதவாகா - விந் 5. சாதியனைத்து முய்யவரும் நீதா எங்கள் சருவ சீவ தயாபர நாதா வேதநாயகன்றன் பதத்தைக் கேட்டிம் மாத்திரம் மேன்மை செய்யும் எந்த நாளுமுமக்கிஸ் தோத்திரம் - விந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinthaiyaaga Vandha Maesaiyaavae Undhan Meethilaasai Kontaenaesaiyaavae Thanthai Manudarkanir Pandhamakalath Thandha Thaaveedharasan Rozhun Thaeva Thirukkumaaraa - Vin 1.ulaka Mayakkath Thinilatuth Thaenae Yenak Kurtra Naalellaam Veenvitutthaenae Nilai Ketaathenaik Kanpaaru Mikumuthaari Neeyae Yennubakaari Neeyae Kirupaivaari. - Vin 2. Paeyulakudal Moonrum Pakai Seyyuthae Yenmaer Pelakka Akkiniampugalai Yeyyuthae Naeya Mikundha Venathaarrum Manavaalanae Nittha Munathirakkam Vaitthaal Kirupaiyaalanae - Vin 3. Kotiya Theevinaik Kendhanaik Kaarunthaeva Kobanj Saabamanaitthaiyun Theerum Adalukkanjsik Kenjsip Panjjarikku Then Nenjjam Anjjal Seyyumumakkapaiya Mapaiyan Thanjjam - Vin 4. Thangku Kirupaiyinutthama Naesaa Vaanor Sanggam Kananjseyyum Sangkaiyin Raasaa Thungga Isaraavaelar Vangkishap Piravateekaa Thulangku Theyva Soroopaa Milangku Marpudhavaakaa - Vin 5. Saathiyanaitthu Muyyavarum Neethaa Enggal Saruva Seeva Thayaabara Naathaa Vaedhanaayakandran Pathatthaik Kaettim Maatthiram Maenmai Seyyum Endha Naalumumakkis Thotthiram - Vin