பாடல் #39301
ஆசையானேனையா மேசையா
🔤 Aasaiyaanaenaiyaa Maesaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசையானேனையா மேசையா மெத்த ஆசையானேனையா நின்பாதத்துக் காசையானேனையா 1.நேச கிருபாலா யேசு மனுவேலா நின்றாள் சரணந்தா பரன்மைந்தா 2. பத்தர் தொழும் நேசா நித்திய சருவேசா பண்பா யிருக்கண்பா ரொரு நண்பா 3. நித்திய சகாயா உத்தம நன்நேயா நின் பாலெனை யன்பாய் வரவும் பார் 4. மாறுதலிலானே யாறுதல் நீதானே வாகா திரியேகா நீயே கா 5. மேவும் வினை நீங்க தேவ கிருபை யோங்க மெய்த் தேவ கிறிஸ்தே கரிசித்தாள் 6. வேதநாயகன்பா வோத வருளன்பா வேதா பரமதாதா யேசுநாதா (தோரை) 7. நித்திய சங்கீத ராகங்கள் பாடி நின்றிரு நாமப் புகழை நிதங்கொண்டாடி நீடியே யருள் தேடியே சாமி யுனை நாடியேயுற வாடியே மெத்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasaiyaanaenaiyaa Maesaiyaa Mettha Aasaiyaanaenaiyaa Ninpaadhatthuk Kaasaiyaanaenaiyaa 1.naesa Kirupaalaa Yaesu Manuvaelaa Ninraal Sarananthaa Paranmainthaa 2. Patthar Thozhum Naesaa Nitthiya Saruvaesaa Panpaa Yirukkanpaa Roru Nanpaa 3. Nitthiya Sakaayaa Utthama Nannaeyaa Nin Paalenai Yanpaay Varavum Paar 4. Maarudhalilaanae Yaarudhal Neethaanae Vaakaa Thiriyaekaa Neeyae Kaa 5. Maevum Vinai Neengga Thaeva Kirupai Yongga Meyth Thaeva Kiristhae Karisitthaal 6. Vaedhanaayakanpaa Vodha Varulanpaa Vaethaa Paramathaathaa Yaesunaathaa (thorai) 7. Nitthiya Sangkeedha Raaganggal Paati Ninriru Naamap Pugazhai Nidhangkontaati Neetiyae Yarul Thaetiyae Saami Yunai Naatiyaeyura Vaatiyae Mettha