பாடல் #3930
வாரும் நாம் எல்லாரும்
🔤 Vaarum Naam Ellaarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார், - இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார். - வாரும் 2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம், - அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார். - வாரும் 3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர், - பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார். - வாரும் 4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே, - இந்த மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் - வாரும் 5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே, - அவர் பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார். - வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Naam Ellaarum Kooti, Makizh Kontaatuvom; - Sarrum Maasilaa Nam Yaesu Naadharai Vaazhtthip Paatuvom. Aa! 1.thaarakam Artra Aezhaigal Thazhaikka Naayanaar, - Indhath Thaarani Yilae Manudava Thaaram Aayinaar. - Vaarum 2.maa Pathaviyai Izhanthu Variyar Aana Naam, - Angkae Maatsi Ura Vaentiyae Avar Thaazhchsi Aayinaar. - Vaarum 3.njaalamathil Avarkkinai Nanpar Yaarular, - Paarum Nam Uyirai Meetkavae Avar Tham Uyir Vittaar. - Vaarum 4.maa Kotiya Saavathin Valimai Neekkiyae, - Indha Mandalatthi Ninruyirth Thavar Vindalanj Senraar - Vaarum 5.paavigat Kaayp Paranidam Parinthu Vaentiyae, - Avar Patsam Vaith Thurum Thozhumbarai Ratsai Seykiraar. - Vaarum