பாடல் #39298
சிம்மாசனக் கருணைப்ரா
🔤 Simmaasanak Karunaipraa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிம்மாசனக் கருணைப்ரா பாவிக்குச் சீர்பாதம் புகல் சுந்தரா ஆனந்த தம்மால் மனுதனாகி விம்மாதெனை யிரட்சித்துச் சும்மாக் கிருபைசெய்யும் இம்மானுவேலான - சிம்மா 1.பொன்னாட்டின் மெய்மன்னா ஆதிமுன்னா ளொரே குடிக்குள் வரும் விக்கின விமோசன்னா பரமாசன்னா திருவாசன்னா மாசன்னா போசன்னா ஓசியன்னா - சிம்மா 2. என்னாலுடல் தன்னால் வருமின்னா அயோ மயக்குது தியக்குது விற்பன்னா விருத்த சேதன்னா பெரியசாதன்னா நூதன்னா சோபன்னா ஆமன்னா மெய் - சிம்மா 3. தானா நெடுவானா பரமகோனா நரோர் பவத்துயர் தவிழ்த்தருள் மெய்ஞ்ஞானா தேவசமானா நன்னிதானா பிரதானா பிமானா சுபானா பொற் - சிம்மா 4. அந்தாதி யின்மைந்தா பாதகந்தாவு சோத னைக்கடிகலைக்கக் கெடவுந்தான் நரகந்தாவி வீனாய்விழுந்தே யழுந்தாது வந்தாள் சரண்சாமி - சிம்மா 5. கத்தா வொரு பத்தா பரிசுத்தா நித்திய இராச்சிய வளத்துட சுபத்தா மாசத்துவத்தா நேசத்திரித்துவா வொருத்துவா பரத்துவா மகத்துவாபர - சிம்மா 6. சராசர தயாபர பிதாவொரு மகத்துவ மிகுத்தகுமாரா வரநரா டொழுபதாராவு தாராவ தாரா வாதாரா பர. - சிம்மா 7. காத்திரா யூதர் கோத்திரா ஞான பாத்திரா வேத சாஸ்திரி பதத்தில் வரு தோத்திரா நன்னேத்திரா பரம சூத்திரா விசித்திரா சுபுத்திரா சுமுத்திரா செய - சிம்மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Simmaasanak Karunaipraa Paavikkuch Seerpaadham Pugal Sundharaa Aanandha Thammaal Manudhanaaki Vimmaathenai Yiratsitthuch Summaak Kirupaiseyyum Immaanuvaelaana - Simmaa 1.ponnaattin Meymannaa Aathimunnaa Lorae Kutikkul Varum Vikkina Vimosannaa Paramaasannaa Thiruvaasannaa Maasannaa Posannaa Osiyannaa - Simmaa 2. Ennaaludal Thannaal Varuminnaa Ayo Mayakkuthu Thiyakkuthu Virpannaa Viruttha Saedhannaa Periyasaadhannaa Noodhannaa Sobannaa Aamannaa Mey - Simmaa 3. Thaanaa Netuvaanaa Paramakonaa Naror Pavatthuyar Thavizhttharul Meynjnjaanaa Thaevasamaanaa Nannithaanaa Pirathaanaa Pimaanaa Supaanaa Por - Simmaa 4. Anthaathi Yinmainthaa Paadhakanthaavu Sodha Naikkatigalaikkak Kedavunthaan Narakanthaavi Veenaayvizhunthae Yazhunthaathu Vanthaal Saransaami - Simmaa 5. Katthaa Voru Patthaa Parisutthaa Nitthiya Iraachsiya Valatthuda Subatthaa Maasatthuvatthaa Naesatthiritthuvaa Vorutthuvaa Paratthuvaa Makatthuvaabara - Simmaa 6. Saraasara Thayaabara Pithaavoru Makatthuva Mikutthakumaaraa Varanaraa Tozhubathaaraavu Thaaraava Thaaraa Vaathaaraa Para. - Simmaa 7. Kaatthiraa Yoodhar Kotthiraa Njaana Paatthiraa Vaedha Saasthiri Pathatthil Varu Thotthiraa Nannaetthiraa Parama Sootthiraa Visitthiraa Suputthiraa Sumutthiraa Seya - Simmaa