பாடல் #39297
சற்றே யெனைப்பாரு
🔤 Sarrae Yenaippaaru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சற்றே யெனைப்பாரு மென் சாமி இரக்கமாய் நீ துத்திய மகிமைப் பிரதாப நித்திய திருக்குமாரா 1.பெத்தலேம் பதியிலுற்ற பிரபலத் தவிது வேந்தன் புத்திரனென வந்துதித்த சத்திய கிறிஸ்து ராசே 2. சத்திய பராபரன்றன் சமூகத்தில் மானிடர்க்கு மத்தியஸ்த னாக நின்ற மகத்துவ வஸ்துவே யையா 3. சந்தத மடர்ந் தலகை தந்திரமிடு தெந்தனுட சிந்தையு மயங்கிஅறி வுஞ்சிதறு தென் செய்குவேன் 4. சொந்த வுடலும் பகை பிறந்த வுலகும் பகை அனந்த கோடியும் பகையில் எந்த மோசமோ என்தேவா 5. சிந்து முதிரத்தின் மாந்தர் தீவினை யனைத்தும் நீக்கி ஐந்து காயத் தடைக்கலத் தருள் செய்யுங் கிருபையோனே 6. கர்த்தனே யுமக் கேராமல் நித்தம் நான்நடந்த பாவம் எத்தனை யானாலுந் தீர்த்துச் சத்துரு வானாலுங் காத்து 7. வேதநாயகத்தின் பாடல் மேவிய மேசையா நீயே பாதுகாத்தெனைக் கண்ணோக்கிப் பாதகமனைத்தும் போக்கி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarrae Yenaippaaru Men Saami Irakkamaay Nee Thutthiya Makimaip Pirathaaba Nitthiya Thirukkumaaraa 1.petthalaem Pathiyilurtra Pirapalath Thavithu Vaendhan Putthiranena Vanthuthittha Satthiya Kiristhu Raasae 2. Satthiya Paraabarandran Samoogatthil Maanidarkku Matthiyastha Naaga Nindra Makatthuva Vasthuvae Yaiyaa 3. Sandhatha Matarn Thalakai Thanthiramitu Thendhanuda Sinthaiyu Mayangkiari Vunjsidharu Then Seykuvaen 4. Sondha Vudalum Pakai Pirandha Vulakum Pakai Anandha Kotiyum Pakaiyil Endha Mosamo Enthaevaa 5. Sinthu Muthiratthin Maandhar Theevinai Yanaitthum Neekki Ainthu Kaayath Thataikkalath Tharul Seyyung Kirupaiyonae 6. Kartthanae Yumak Kaeraamal Nittham Naannatandha Paavam Etthanai Yaanaalun Theertthuch Satthuru Vaanaalung Kaatthu 7. Vaedhanaayakatthin Paadal Maeviya Maesaiyaa Neeyae Paathukaatthenaik Kannokkip Paadhakamanaitthum Pokki