பாடல் #39295
பாவியெனைச் சற்றே
🔤 Paaviyenaich Sarrae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியெனைச் சற்றே கண்பாருஞ் சுவாமி தேவ திருப்பாலனான சீவனின் மன்னாவே சிந்தை விசாலா மனோலா குணாலா தேசுலாவு திவிய நேசா யேசு சருவேசா பாவி 1.இந்த லோக வாழ்வை நாடி என்தன் மனம் வாடுதே தந்திரப் பிசாசதும் நிற் பந்தமுறச் சாடுதே இடுக்கண் மிகுதுயர் படுத்து தெனையே திடத்த உனதுயிர் விடுத்த திலையோ 2. பெந்தினந் திரண்டுக் கூடிக் கொந்தளித்துப் பேசுதே அந்தியுஞ் சந்தியுமாக நிந்தனை செய் தேசுதே பினுமுடலட மொடெனொடு சமரிடுதே நினைவு தவறிடவு மனது பதறுதே 3. பத்துரை மறுத்துப் பேயின் எத்தினிற் போனேனே குத்திரத் துரோகத்தினாற் சத்துரு வானேனே பதைக்க மனமது கொதிக்கு துலகொடு கதிக்க வலகையும் வதைக்குதய்யோ 4. அங்குனின் பாடு கள்நல்லோர் தங்களுக்குப் பேறோ செங்குருதி பாவிகளின் பங்கதல்லால் வேறோ ஆவிது தன்மமல்ல தீவினை வளருதே தேவரீ ரடி மையை மீழ்வது கடனே 5. வேதநாயகத்தின் பாடல் மேவு சருவேசனே பாதகர் பாவமெல்லாம் நீவு மேசுநாதனே மெத்த அடிமை துயருற்று மெலிகுவனோ சற்று முனது திருச் சித்தமுருகலையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyenaich Sarrae Kanpaarunj Suvaami Thaeva Thiruppaalanaana Seevanin Mannaavae Sinthai Visaalaa Manolaa Kunaalaa Thaesulaavu Thiviya Naesaa Yaesu Saruvaesaa Paavi 1.indha Loga Vaazhvai Naati Enthan Manam Vaatuthae Thanthirap Pisaasathum Nir Pandhamurach Saatuthae Itukkan Mikuthuyar Patutthu Thenaiyae Thidattha Unathuyir Vituttha Thilaiyo 2. Penthinan Thirantuk Kootik Kondhalitthup Paesuthae Anthiyunj Santhiyumaaga Nindhanai Sey Thaesuthae Pinumudalata Motenotu Samarituthae Ninaivu Thavaridavu Manathu Patharuthae 3. Patthurai Marutthup Paeyin Etthinir Ponaenae Kutthirath Thurogatthinaar Satthuru Vaanaenae Pathaikka Manamathu Kothikku Thulakotu Kathikka Valakaiyum Vathaikkudhayyo 4. Angkunin Paatu Kalnallor Thanggalukkup Paero Sengkuruthi Paavigalin Panggathallaal Vaero Aavithu Thanmamalla Theevinai Valaruthae Thaevaree Rati Maiyai Meezhvathu Katanae 5. Vaedhanaayakatthin Paadal Maevu Saruvaesanae Paadhakar Paavamellaam Neevu Maesunaadhanae Mettha Atimai Thuyarurru Melikuvano Sarru Munathu Thiruch Sitthamurugalaiyo