பாடல் #39294
உந்தன் தஞ்சம் எந்தன்
🔤 Undhan Thanjjam Endhan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் தஞ்சம் எந்தன் துன்பந்தீ ரோசியன்னா சீவனே மேசியா மன்னா என்னேய யேசு தேவனே 1.விந்தந் தந்துன் சொந்தங் கொண்டுங்கா மேன்மை சீவபானனே பான்மைத் தேவகோனனே மெய் ஞானஸ்நானனே 2. சுந்தரந் தங்குஞ் செம்பொன் சங்கம்பா வோதும் வேதப் போதனே தீதுறாத பாதனே சங்கீத நாதனே 3. பங்கம்தங் கென்னங்கம் பொங்கும் நெஞ் சாவலாகி வாடுதே தேவரீரை நாடுதே யென்னாவி தேடுதே 4. வண்டன் றொண்டன் றண்டுஞ் சண்டங்கே டோட நீடா தாரனே பீடுடாடு வீரனே கண்டேடு தீரனே 5. நன்றுன்னன்பும் நண்பும் பண்புங்கண் காணவா வென்நேசனே ஈனர் பாவநாசனே பாவாணர் வாசனே 6. அன்றன் றும் பங்கங் கொன்றும் சகாயமே செய்யாயனே தூயனே ஐங்காயனே வாநேய சேயனே 7. அஞ்சங்கஞ்சென் றொன்றும் பண்பொன்றிங் கேசுவே தந்தாளுமே நேசமா யெந்நாளுமே நின்னாசி கூறுமே 8. வண்டின் பண் சந்தங் கொண்டெங்குஞ் சீர் வேதநாயகன் பாடவே பாதமே கொண்டாடவே யென்றீதின்றோடவே டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டாரி டாரி டாரி டாம் டாரிடரி டாரிடரி டாரி டரி டம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Thanjjam Endhan Thunbanthee Rosiyannaa Seevanae Maesiyaa Mannaa Ennaeya Yaesu Devanae 1.vindhan Thanthun Sondhang Kontungkaa Maenmai Seevapaananae Paanmaith Thaevakonanae Mey Njaanasnaananae 2. Sundharan Thangkunj Sempon Sanggampaa Vothum Vaedhap Podhanae Theethuraadha Paadhanae Sangkeedha Naadhanae 3. Panggamthang Kennanggam Pongkum Nenj Saavalaaki Vaatuthae Thaevareerai Naatuthae Yennaavi Thaetuthae 4. Vandan Rondan Rantunj Sandangkae Toda Neetaa Thaaranae Peetutaatu Veeranae Kantaetu Theeranae 5. Nanrunnanpum Nanpum Panpunggan Kaanavaa Vennaesanae Eenar Paavanaasanae Paavaanar Vaasanae 6. Andran Rum Panggang Konrum Sakaayamae Seyyaayanae Thooyanae Aingkaayanae Vaanaeya Saeyanae 7. Anjjangganjsen Ronrum Panponring Kaesuvae Thanthaalumae Naesamaa Yennaalumae Ninnaasi Koorumae 8. Vantin Pan Sandhang Kontengkunj Seer Vaedhanaayakan Paadavae Paadhamae Kontaadavae Yenreethinrodavae Tam Tam Tam Tam Tam Tam Tam Tam Tam Taari Taari Taari Taam Taaridari Taaridari Taari Tari Tam