பாடல் #39293
மன வாதை யடைந்த
🔤 Mana Vaathai Yataindha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன வாதை யடைந்த கன பாதகன் வஞ்ச மறவே கிருபை கூரையா சனவானவர் சங்கம் அனைவோரும் வணங்குந் தவிராச சுதந்திர திவிய யேசு நரேந்திரா மன 1.பாவிக் குந்தன்மேல் விசுவாசமே திருப் பாதந் துணைதரும் விலாசமே சீவனே நீரெனக்கதி நேசமே தேவரீர் சித்தத்துக் கேற்க நடக்கச் செய்யும் பிரகாசமே 2. கடியுங் கொடுமையாகச் சீறுதே மாயக் கலக உலகம் பழி கூறுதே சடமுந் திடமில்லாமல் மாறுதே மிகத் தயங்கி மனதெல்லாம் வேசாறுதே சுவாமி 3. ஞாயப்பிரமாணம் குற்றம் சாட்டுதே எந்தன் நடக்கை யெலாம் பொல்லாப்பில் மாட்டுதே மாய பிரபஞ்ச மிச்சை காட்டுதே பாவ வழியிலென்னை யிழுத்தாட்டுதே சுவாமி 4. கங்குல் பகலுங் கண்ணீர் ஓட்டமே நித்தங் கவலை பிடித்தென் முகம் வாட்டமே யெங்கே பார்த்தாலும் மா போராட்டமே கெட்ட ஏழைக்குன் பதமே கொண்டாட்டமே சுவாமி 5. பாதுகாத் தருளுதாரியே மிக்க பரம ஞானக் கருணை வாரியே வேதநாயகனனு சாரியே யேசு மேசியா நல்லுபகாரியே சுவாமி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mana Vaathai Yataindha Kana Paadhakan Vanjja Maravae Kirupai Kooraiyaa Sanavaanavar Sanggam Anaivorum Vanangkun Thaviraasa Sudhanthira Thiviya Yaesu Naraenthiraa Mana 1.paavik Kundhanmael Visuvaasamae Thirup Paadhan Thunaidharum Vilaasamae Seevanae Neerenakkathi Naesamae Thaevareer Sitthatthuk Kaerka Natakkach Seyyum Pirakaasamae 2. Katiyung Kotumaiyaagach Seeruthae Maayak Kalaka Ulakam Pazhi Kooruthae Satamun Thidamillaamal Maaruthae Migath Thayangki Manathellaam Vaesaaruthae Suvaami 3. Njaayappiramaanam Kurtram Saattuthae Endhan Natakkai Yelaam Pollaappil Maattuthae Maaya Pirapanjja Michsai Kaattuthae Paava Vazhiyilennai Yizhutthaattuthae Suvaami 4. Kangkul Pakalung Kanneer Ottamae Nitthang Kavalai Pititthen Mugam Vaattamae Yengkae Paartthaalum Maa Poraattamae Ketta Aezhaikkun Pathamae Kontaattamae Suvaami 5. Paathukaath Tharuluthaariyae Mikka Parama Njaanak Karunai Vaariyae Vaedhanaayakananu Saariyae Yaesu Maesiyaa Nallubakaariyae Suvaami