பாடல் #39291
தயை கூரையா யென்சாமி
🔤 Thayai Kooraiyaa Yensaami
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயை கூரையா யென்சாமி பாவிநான் தயை கூரையா நின்தாசனோ சனா தயை கூரையா 1.செயமனுவேலன் நயவனுகூலன் சீரா தீரா வதிகாரா திருக்குமாரா தேவர்கள் பணிவிடை மேவிய நேச விலாச கிருபாசன யேசு நரேந்திரா 2. வானத் திருந்துவந்து ஞானத்துருவுகந்து வளமைக் கொண்டு கிருபைவிண்டு குடில் கண்டு மாடடை வீட தினூடு புன்மேடையி னீடிய போதினி மோடியதாமோ 3. அன்னையெளிய தாயோ என்னை ரட்சிக்கும் நீயோ அதிசய விதமோ இதிதமோ வுன்னதமோ ஆபர வசனமாகுது மெய்யா ஆயிரமாயிரங் கீர்த்தனமையா 4. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி தராதல மேவி வா பாவி யெனக்கூவிச் சாங்கம தாயரு ளோங்கிம காபெரும் ஈங்கிஷை யாயுயிர் நீங்கின தாலேநீ 5. தேவரட்சிப் பனைத்தும் பாவிகட்காய் விளைத்துஞ் சிலுவையில் மாண்டும் துயர் பூண்டுஞ் சிறைமீண்டுஞ் சீவனோடாதி பராபரனார் வல பாரிசமே யரசாளு மிநேரம் நீ 6. தூதர்சேனை கொண்டாட்டோ வேதநாயகன் பாட்டோ சோபனமையா யேசையா மேசையா சுத்த கிருபாநதி நித்திய பராபர வஸ்தெனு மாதி கிறிஸ்து மணாளா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayai Kooraiyaa Yensaami Paavinaan Thayai Kooraiyaa Ninthaasano Sanaa Thayai Kooraiyaa 1.seyamanuvaelan Nayavanukoolan Seeraa Theeraa Vathikaaraa Thirukkumaaraa Thaevarkal Panivitai Maeviya Naesa Vilaasa Kirupaasana Yaesu Naraenthiraa 2. Vaanath Thirunthuvanthu Njaanatthuruvuganthu Valamaik Kontu Kirupaivintu Kutil Kantu Maadatai Veeda Thinootu Punmaetaiyi Neetiya Pothini Motiyathaamo 3. Annaiyeliya Thaayo Ennai Ratsikkum Neeyo Athisaya Vidhamo Ithidhamo Vunnathamo Aabara Vasanamaakuthu Meyyaa Aayiramaayirang Keertthanamaiyaa 4. Thanthai Pithaavin Maindhan Maindhar Vativamaaki Tharaadhala Maevi Vaa Paavi Yenakkoovich Saanggama Thaayaru Longkima Kaaperum Eengkishai Yaayuyir Neengkina Thaalaenee 5. Thaevaratsip Panaitthum Paavigatkaay Vilaitthunj Siluvaiyil Maantum Thuyar Poontunj Siraimeentunj Seevanotaathi Paraabaranaar Vala Paarisamae Yarasaalu Minaeram Nee 6. Thoodharsaenai Kontaatto Vaedhanaayakan Paatto Sobanamaiyaa Yaesaiyaa Maesaiyaa Suttha Kirupaanathi Nitthiya Paraabara Vasthenu Maathi Kiristhu Manaalaa