பாடல் #39290
சாமி நின்னடி தந்து
🔤 Saami Ninnati Thanthu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமி நின்னடி தந்து நேமி கிறிஸ் தேசுநாத சாமி நின்னடி தந்துநேமி பூமிதனில் வந்த அபிர கா மூதவி தாதிமைந்த - சாமி 1.ஆதியந்த மிலாவனாதி அளவில்லாத நீதி நிறைந்த பரஞ்சோதி நிகரொன்றில்லா வேதமந்திர கியானமோதி வெளிச்சமாக சாதியெலார்க்கு மோட்சவீதி தனையே காட்ட மாது விற்றினில் மோன மனுட குமாரனான 2. தானாயிருந்த வொரு சத்தம் சருவலோக கோனான தேவ திருச்சித்தம் குறைகளன்றி வானூடெழுந்த பரிசுத்தம் மனுடருக்குப் பரனாய் விளங்கும் வாக்குத்தத்தம் பராபரனின் ஞானாகமத் தொருத்துவம் ஆனாலும் மெத்த மகத்துவம் 3. சம்மனசுக்கள் நலசங்கம் சதாபதிதன் செம்மலைக்கொண் டாடினது துங்கம் திரியேகவஸ்து மும்முத லொன்றா யெழுந்த புங்கம் முன்னாள் வனத்தில் விம்மிய பிசாசை வென்ற சிங்கம் மேசையா நீயே யெம்மிறைய பரஞ்சித் தங்கம் துன்மனசா லென்ன வில்லங்கம் 4. இன்றைக் கழியும் லோக வாழ்வு இதைநிசமென் றொன்றித் திரிவதே யென் தாழ்வு உறுதியற்றுய் கன்றிமயங்கும் மனநோவு மயக்கமற்றுப் பொன்றத் தயவோ டென்னை யேவு புண்ணியமையா வென்றிக் கருணைத்தூவு என்றைக்கும் நீ என்றேவு 5. ஆதமேவை செய்த தாறுமாறு அகிலத்துற்ற சாதிகட்கு வந்ததே யவதூறு தவீதுபோற்றும் யூதாவின் கோத்திரச் சிங்கேறு ஒருத்தராலே தீதனைத்தும் பொடித்த நீறு தேவசகாய வேதநாயகன் பாவைக் கூறுவே னெனக்கருள் மோட்ச பேறு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saami Ninnati Thanthu Naemi Kiris Thaesunaadha Saami Ninnati Thanthunaemi Poomidhanil Vandha Apira Kaa Moodhavi Thaathimaindha - Saami 1.aathiyandha Milaavanaathi Alavillaadha Neethi Niraindha Paranjsothi Nigaronrillaa Vaedhamanthira Kiyaanamothi Velicchamaaga Saathiyelaarkku Motsaveethi Thanaiyae Kaatta Maathu Virrinil Mona Manuda Kumaaranaana 2. Thaanaayirundha Voru Sattham Saruvaloga Konaana Thaeva Thiruchsittham Kuraigalanri Vaanootezhundha Parisuttham Manudarukkup Paranaay Vilangkum Vaakkutthattham Paraabaranin Njaanaagamath Thorutthuvam Aanaalum Mettha Makatthuvam 3. Sammanasukkal Nalasanggam Sathaabathidhan Semmalaikkon Taatinathu Thunggam Thiriyaegavasthu Mummudha Lonraa Yezhundha Punggam Munnaal Vanatthil Vimmiya Pisaasai Vendra Singgam Maesaiyaa Neeyae Yemmiraiya Paranjsith Thanggam Thunmanasaa Lenna Villanggam 4. Inraik Kazhiyum Loga Vaazhvu Ithainisamen Ronrith Thirivathae Yen Thaazhvu Uruthiyarruy Kanrimayangkum Mananovu Mayakkamarrup Pondrath Thayavo Tennai Yaevu Punniyamaiyaa Venrik Karunaitthoovu Enraikkum Nee Enraevu 5. Aadhamaevai Seytha Thaarumaaru Akilatthurtra Saathigatku Vandhathae Yavathooru Thaveethuporrum Yoothaavin Kotthirach Singkaeru Oruttharaalae Theedhanaitthum Potittha Neeru Thaevasakaaya Vaedhanaayakan Paavaik Kooruvae Nenakkarul Motsa Paeru