பாடல் #39286
குற்ற மெத்தத் தனையோ
🔤 Kurtra Metthath Thanaiyo
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குற்ற மெத்தத் தனையோ அத்தனையும் பொருத்து நீயென் குறை தீர்த்துத் தற்காத் தெனக் கருள்புரிவாய். 1.நித்திய தத்துவத்துயர்ந்த முற்றொழித் திரித்துவ தேவே அர்ச்சயப் பிதாவினுக்கோர் உச்சிதத் திருக்குமாரா பொஸ்தகத் துரைப் பிரகாரம் பெத்தலைப் பதிக்குள் வந்த பூரணக் கிருபை சிறந்த காரணக் கிறிஸ்துவே என் 2. அச்சமற்ற தக்கிரமித்த துச்சணக் கிருத்துவமான அக்கிரமத்தின் மக்களுக்குள் விக்கிரகத்திடத்தி லோடிப் பச்சிலைத் தளிர்களிட்டு லட்ச லெட்சங் கற்சிலைக்கும் பட்சம் வைத் தலைக்கழிந்த லச்சை கெட்ட பாவிநானென் 3. துற்குணத்தி லுற்பவத்த ழுக்கறத் துடைத்துன் வேத சொற்றிரத்து நற்குணப்ப டுத்தியற்புதப் பிரகாரம் முற்பவத் தருக்களித்தி ருக்கனைத்தையுந் தொலைத்து முக்கியப் பிரதாப மாயுன் பக்கிஷக் கிருபையளித் தென் 4. சிஷ்டி யாவையும் படைத்த மட்டிலா மகத்துவ தேவே கெட்ட மாந்தர் வாழ்க மாட்டுக் கொட்டிலிற் பிறந்த கோவே திட்டமாய் வேதநாயகன் கட்டிய பாவுக் கன்பாவே இஷ்டமே யெனக்கு நல்ல திஷ்டமே சிரேஷ்டமே யென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurtra Metthath Thanaiyo Atthanaiyum Porutthu Neeyen Kurai Theertthuth Tharkaath Thenak Karulpurivaay. 1.nitthiya Thatthuvatthuyarndha Murrozhith Thiritthuva Thaevae Arcchayap Pithaavinukkor Uchsidhath Thirukkumaaraa Posthakath Thuraip Pirakaaram Petthalaip Pathikkul Vandha Pooranak Kirupai Sirandha Kaaranak Kiristhuvae En 2. Acchamartra Thakkiramittha Thucchanak Kirutthuvamaana Akkiramatthin Makkalukkul Vikkirakatthidatthi Lotip Pachsilaith Thalirkalittu Latsa Letsang Karsilaikkum Patsam Vaith Thalaikkazhindha Lachsai Ketta Paavinaanen 3. Thurkunatthi Lurpavattha Zhukkarath Thutaitthun Vaedha Sorriratthu Narkunappa Tutthiyarpudhap Pirakaaram Murpavath Tharukkalitthi Rukkanaitthaiyun Tholaitthu Mukkiyap Pirathaaba Maayun Pakkishak Kirupaiyalith Then 4. Sishti Yaavaiyum Pataittha Mattilaa Makatthuva Thaevae Ketta Maandhar Vaazhka Maattuk Kottilir Pirandha Kovae Thittamaay Vaedhanaayakan Kattiya Paavuk Kanpaavae Ishtamae Yenakku Nalla Thishtamae Siraeshtamae Yen