பாடல் #39285
யேசு பாலகனே நான் பாவி
🔤 Yaesu Paalakanae Naan Paavi
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசு பாலகனே நான் பாவி யென்னையாளுமேவி- யேசுபாலகனே 1.ராஜதவிதா சன கிரிடா திபனே தேவ ராக்கினி மரிதந்த பிரதாபனே நேச மனதோடு மனு வாகியெனை யாளவந்த நித்தனே கிருபை வைத் தெனை முற்றிலு மாண்டு கொள்ளையா. 2. பாவ மீறுதே சென்மச் சுபாவப் பாதக மயக்கந் தலை மீதிலேறுதே காவில் முந்த மேவி வந்த தீவினைப் பசாசு பயங் காட்டுதே போராட்டங்கள் பா ராட்டுதே கோட்டி கொள்ளுதே. 3. வஞ்ச வையகம் பகைக்குதே மாங்கிஷத் திச்சை வாதை செய்வதால் மனமெல்லாந் திகைக்குதே அஞ்சலஞ்சல் காவென் றுனைப் பஞ்சரித்துக் கெஞ்சுகின்றேன் ஆச்சரியமாக வந்துன் காட்சி தந்தனுக் கிரகிப்பாய். 4. ஆதிதந்த மாவிசித்திரமே தவீது வங்கிஷ ஆண்டவா கிறிஸ்துக் கிருபா சமுத்திரமே, வேதநாயகன் பதங்கொண் டாதரித் தெனையெந்நாளும் மிக்க சொற்பிரவைக் கண்ணோக்கும் பக்கிஷக் கிருபைக் குள்ளாக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesu Paalakanae Naan Paavi Yennaiyaalumaevi- Yaesupaalakanae 1.raajathavithaa Sana Kiritaa Thibanae Thaeva Raakkini Maridhandha Pirathaabanae Naesa Manathotu Manu Vaakiyenai Yaalavandha Nitthanae Kirupai Vaith Thenai Murrilu Maantu Kollaiyaa. 2. Paava Meeruthae Senmach Supaavap Paadhaka Mayakkan Thalai Meethilaeruthae Kaavil Mundha Maevi Vandha Theevinaip Pasaasu Payang Kaattuthae Poraattanggal Paa Raattuthae Kotti Kolluthae. 3. Vanjja Vaiyakam Pakaikkuthae Maangkishath Thichsai Vaathai Seyvathaal Manamellaan Thikaikkuthae Anjjalanjjal Kaaven Runaip Panjjaritthuk Kenjsukinraen Aacchariyamaaga Vanthun Kaatsi Thandhanuk Kirakippaay. 4. Aathidhandha Maavisitthiramae Thaveethu Vangkisha Aandavaa Kiristhuk Kirupaa Samutthiramae, Vaedhanaayakan Pathangkon Taadharith Thenaiyennaalum Mikka Sorpiravaik Kannokkum Pakkishak Kirupaik Kullaakkum.