பாடல் #39284
பாவியானேன் நானே
🔤 Paaviyaanaen Naanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியானேன் நானே மா கெட்ட பாவியானேன் நானே. தீவினையிலே யலைந்து ஜீவனிலையே கொலைந்து. பாவி 1.ஆதிபர னோது மொரு வேத நெறி யேதவறி வாதைபுரி சூதலகை பேதமையை நாடி. 2. யேசு பரனேச விசுவாசமறவே சிறுகி மாசதுறு நீசவுல காசை தலையேறி. 3. வங்கைமிக சங்கத மதங்கொண் மடமின்கடரு வங்கண மிணங்கி மதி மங்கி மயல் பொங்கி 4. தந்தையிவர் மைந்தரவர் பெந்ததுகள் சொந்தமென அந்தி பகலுந்தியினினைந் திருகி வெந்து 5. நஞ்சரவின் வெஞ்சினமுடன் சதிசெய் குஞ்சி நவ வஞ்சமன நெஞ்சரை யிறைஞ்சியடி தொஞ்சு. 6. ஓடி யுற வாடி வலு பேடிகளைநாடி யிசை பாடி வெகு கோடிவினை மூடி முகம் வாடி. 7. நல்ல வழி தேடி வேதநாயகன் பதங்கள் பாடி வல்ல பரனைக் கொண்டாடி வழுத்தாமல் மனம் வாடி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyaanaen Naanae Maa Ketta Paaviyaanaen Naanae. Theevinaiyilae Yalainthu Jeevanilaiyae Kolainthu. Paavi 1.aathibara Nothu Moru Vaedha Neri Yaedhavari Vaathaipuri Soodhalakai Paedhamaiyai Naati. 2. Yaesu Paranaesa Visuvaasamaravae Siruki Maasathuru Neesavula Kaasai Thalaiyaeri. 3. Vangkaimiga Sanggatha Mathangkon Mataminkataru Vanggana Minangki Mathi Mangki Mayal Pongki 4. Thanthaiyivar Maindharavar Pendhathugal Sondhamena Anthi Pakalunthiyininain Thiruki Venthu 5. Nanjjaravin Venjsinamudan Sathisey Kunjsi Nava Vanjjamana Nenjjarai Yirainjsiyati Thonjsu. 6. Oti Yura Vaati Valu Paetigalainaati Yisai Paati Veku Kotivinai Mooti Mugam Vaati. 7. Nalla Vazhi Thaeti Vaedhanaayakan Pathanggal Paati Valla Paranaik Kontaati Vazhutthaamal Manam Vaati.