பாடல் #39283
மனுவேலர் திருநாம
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
மனுவேலர் திருநாம மிகழாதே மனமே சாகும் மனுடர் தமை மகிழ்ந்து புகழாதே. கனமும் சங்கையுமங்க நிகழாதே நித்திய காட்சிதரு பரமாச்சரிய வான ராட்ச்சிய வலமையின் மோட்சா தனபதி. 1.அழியு முலக வாழ்வை மதியாதே அதில் அறிவு கெட மனது பதியாதே பழிகொள் பாகாலின் வீட்டைமிதியாதே கன பாதகமாய் மன வாதைகளே படு சோதனை மேவியும் நீதிகெடாதே. 2. பாவிகளின் வழியில் நில்லாதே தீயர் பண்ணும் யோசனைகளில் செல்லாதே கோவிகளாசனமும் பொல்லாதே சற் குருவை வந்தனைசெய் சர சகந்தையிலோர் தரையும் நிந்தனைகள் படிறு சொல்லாதே. 3. வேதநாயகன் பாட்டைப் படிப்பாயே யேசு மேசியாவைக் கண்டு பிடிப்பாயே நாத கீதங்கள் பாடி நடிப்பாயே பவ நாசரதி பிரிய நேசரி சரவேல் ராஜரொரு சருவேச ரருள் பெற.