பாடல் #39282
சுந்திரப்பாத விந்தத் தந்த
🔤 Sunthirappaadha Vindhath Thandha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுந்திரப்பாத விந்தத் தந்தத் தெந்தனைப் பரிவாயே சொந்தத் தேவ சிந்தைச்சாதை முந்தப் புரிவாயே 1.தந்திரத்தாதி மைந்தர்க்கான விந்தைப் பரம போதா சந்தச் சாந்திஸ் பிரீத்துக்கிறிஸ்துச் சாமி யேசுநாதா 2. அஞ்சிப்பாவி கெஞ்சப்பேயும் மிஞ்சக் கறுவிச் சீறுதே அங்கத் துரோகர் சங்கத்தோ டிணங்கத் துறுவிக் கூறுதே. 3. அன்பற்றுலகந் துன்பப் படுத்தி அடங்க நடுங்கத் தூற்றுதே யலங்கக் கலங்க மலங்க அசங்க தங்கணிபங்கள் சாற்றுதே. 4. தொடுத்துக் கொந்தளித்தடுத்து மேதையும் துயரத் துயரப் படுத்துதே சூட்டி யாசையப் பூட்டி விழுக் காட்டிச் சாட்டிக் கெடுத்துதே. 5. வீட்டுக் கவலை போட்டியாய் குரங் காட்டப் படுத்தி வாட்டுதே வேலைப்புறத் தோரோலைத் துரும்பு போலக் கொதித்திட் டோட்டுதே. 6. புத்திரர் மித்திரர் களத்திரம் யாவருஞ் சத்துருவாஞ் சந்தைக் கூட்டமே பொங்கித் திரண்டு பிரண்டுருண் டொழிந் தோடிப்போம் நீரோட்டமே. 7. சொற்ப உலகை மெய்ப்பென பிர மிப்பதாகக் கண் டேங்கினேன் றொந்த சாரத் தந்தகாரத் தெந்த நேரமும் தூங்கினேன். 8. மேசியா உனதாட்டைக் காட்டிலே கூட்டித் தோளிலே போட்டுக்கோ வேதநாயகன் பாட்டுக்காயினும் கேட்டுக்கோ வெனை மீட்டுக்கோ. டம் டம் டாரி டம் டம் டாரி டம் டம் டாரி டாரி. - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sunthirappaadha Vindhath Thandhath Thendhanaip Parivaayae Sondhath Thaeva Sinthaichsaathai Mundhap Purivaayae 1.thanthiratthaathi Maindharkkaana Vinthaip Parama Pothaa Sandhach Saanthis Pireetthukkiristhuch Saami Yaesunaathaa 2. Anjsippaavi Kenjjappaeyum Minjjak Karuvich Seeruthae Anggath Thurogar Sanggattho Tinanggath Thuruvik Kooruthae. 3. Anbarrulakan Thunbap Patutthi Adangga Natunggath Thoorruthae Yalanggak Kalangga Malangga Asangga Thangganibanggal Saarruthae. 4. Thotutthuk Kondhalitthatutthu Maethaiyum Thuyarath Thuyarap Patutthuthae Sootti Yaasaiyap Pootti Vizhuk Kaattich Saattik Ketutthuthae. 5. Veettuk Kavalai Pottiyaay Kurang Kaattap Patutthi Vaattuthae Vaelaippurath Thorolaith Thurumpu Polak Kothitthit Tottuthae. 6. Putthirar Mitthirar Kalatthiram Yaavarunj Satthuruvaanj Santhaik Koottamae Pongkith Thirantu Piranturun Tozhin Thotippom Neerottamae. 7. Sorpa Ulakai Meyppena Pira Mippathaagak Kan Taengkinaen Rondha Saarath Thandhakaarath Thendha Naeramum Thoongkinaen. 8. Maesiyaa Unathaattaik Kaattilae Koottith Tholilae Pottukko Vaedhanaayakan Paattukkaayinum Kaettukko Venai Meettukko. Tam Tam Taari Tam Tam Taari Tam Tam Taari Taari. - 2