பாடல் #39280
மன்னு நித்திய சுபசோபனா
🔤 Mannu Nitthiya Subasobanaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னு நித்திய சுபசோபனா மகிமையின் கிருபாசனா உன்னதத் திவிய போசனா ஓலமோல முமக் கோசனா 1.பொன்னகர்ச் சருவேசனே பூரணப்பரம நேசனே யென்னையாளுனது தாசனே யேசு மானுவே லிராஜனே 2. ஒப்பிலாதுயர் சிநேகமே உச்சிதத்திரு விவாகமே தப்பிலாத தெய்வீகமே தரும ஜீவப்பிரவாகமே 3. பத்தனைப் பதிய நாட்டுவாய் பரம மோட்ச வழி காட்டுவாய் சித்தமா யருள் பாராட்டுவாய் தீமை யாவையும் விட்டோட்டுவாய் 4. பரதபிக்கு தெனின் நெஞ்சமே பாவ மாயப் பிரவஞ்சமே தருணமீ தருள்செய் கொஞ்சமே தாசனானுனது தஞ்சமே 5. தயவு செய்யு மதிகாலமே சருவ நன்மையின் விசாலமே மயமுலாவு மனுகூலமே மானுவேல னாதிமூலமே 6. பாதுகாத்தருள் சிங்காரனே பரம ராட்சிய அதிகாரனே வேதநாயக னுதாரனே மேசியா நசரை யூரனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannu Nitthiya Subasobanaa Makimaiyin Kirupaasanaa Unnathath Thiviya Posanaa Olamola Mumak Kosanaa 1.ponnakarch Saruvaesanae Pooranapparama Naesanae Yennaiyaalunathu Thaasanae Yaesu Maanuvae Liraajanae 2. Oppilaathuyar Sinaegamae Uchsidhatthiru Vivaagamae Thappilaadha Theyveegamae Tharuma Jeevappiravaagamae 3. Patthanaip Pathiya Naattuvaay Parama Motsa Vazhi Kaattuvaay Sitthamaa Yarul Paaraattuvaay Theemai Yaavaiyum Vittottuvaay 4. Parathapikku Thenin Nenjjamae Paava Maayap Piravanjjamae Tharunamee Tharulsey Konjjamae Thaasanaanunathu Thanjjamae 5. Thayavu Seyyu Mathikaalamae Saruva Nanmaiyin Visaalamae Mayamulaavu Manukoolamae Maanuvaela Naathimoolamae 6. Paathukaattharul Singkaaranae Parama Raatsiya Athikaaranae Vaedhanaayaka Nuthaaranae Maesiyaa Nasarai Yooranae