பாடல் #39273
ஞானஸ்நானத் தீட்சையே
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
ஞானஸ்நானத் தீட்சையே கன மானத் தியானக் காட்சியே யின நன்மைப் பிரம சூட்சியே மன வுண்மைப் பரம சாட்சியே சனவானத்தமலர் மீட்சியே தன வானொத்தவர் சொன் மாட்சியே தினம் மகிழ்ச்சி புகழ்ச்சி திகழ்ச்சி சுபட்சி மாட்சி மேன்மைக் கத்தாட்சியே - ஞான 1.அக்கியானத்திருள் நாசமே - அதி மெக்கியானப் பிரகாசமே - மதி அரிய நல் விசுவாசமே - கதி பெரிய சொல் லுபதேசமே - நிதி மிக்காப் பொக்கிஷ பாசமே - பதி விக்கா பக்கிஷ நேசமே - விதி லாட்சமட்செய ராட்சியப்பரம தீட்சண திவிய கடாட்சமே - ஞான 2. ஆரண ஞான வேதாந்தமே நிறை பூரண மோன நாதாந்தமே - பறை அர்ச்சய வுச்சிதா னந்தமே - மறை நிச்சய சச்சிதானந்தமே - முறை காரண தீத ஞானேந்திரமேயிறை தாரண போத விருத்தாந்திரமே யுறை கந்தரஞ் சுந்தரம் முந்தர மந்தரம் காந்த சுகாந்த திட்டாந்தமே - ஞான 3. மேலாதார சற்பாத்திரமே - துவி நூலாதார சொற் சாத்திரமே - கவி வேதநாயகன் றோத்திரமே - புவி நீதநாயகன் சூத்திரமே - நவி சீலாகோல முக்காத்திரமே - சவி சாலாமூல தக் கோத்திரமே - செவி சித்திர விசித்திர சமுத்திர சுமுத்திர விச்சேத்திர நன்னேத்திர நட்சத்திரமே - ஞான