பாடல் #39272
ஆசீர்வாதமே கிருபையுண்டான
🔤 Aaseervaadhamae Kirupaiyuntaana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாதமே கிருபையுண்டான காலமே அல்லேலூயா மேசியாவினால் விசு வாசநேசர்மேல் அல்லேலூயா - ஆசீர் 1.தந்தை திருப்பாலன் அதிவிந்தை மனுவேலன் சாதியாருட தீதுமாறிட மாது மாமரியாளிடம் வந்த ஆ. அல்லே 2. காட்டொலிவத் தருநாமே கோட்டான் குஞ்சுகளாமே (ஏசா. 43:20) மீட்டுக்கொண்ட தேவாட்டுக் குட்டியின் பாட்டுக்கும் பட்டபாட்டுக்குந் துதி ஆ. அல்லே 3. உத்தம போதகமார் ஒரு மித்துவந் தோதியநேர் சுத்த சுவிசேட ஞானவாக்கியம் எத்தனை யெத்தனை யானபாக்கியம் ஆ. அல்லே 4. சத்திய ராஜாங்கம் தழைத் தெத்திசையு மோங்க சித்தமான திருவுளச் செயல் அத்தியந்த வானந்த சந்தோஷம் ஆ. அல்லே 5. அட்சயமாக மிசியோன் தட்சகர் வாழ தெட்சணாயண முத்தராயணம் எச்சபைகளும் பெருகப் பெருக ஆ. அல்லே 6. சித்திரகூடம் போலே திரத்திடும் அஸ்தி வாரத்தாலே தேசமெங்கணும் வேதம் விளங்கவும் தேவாலயங்கள் பிரசங்க முழங்கவும் ஆ. அல்லே 7. அருமையாளரே கிறிஸ்துவுக் குரிமையாளரே திருநெல்லை வேதநாயகன் பாட்டுத் தேவகுமாரனுக்கான கொண்டாட்டு ஆ. அல்லே தேவாரம் திருநெல்லை யாதியாய்த் தென் கடல் வடகடல் மட்டாகப் பெருகிய சபையின் தேவஸ் தலங்களும் பெருக்கமாகி அரியசற் குருமாரோங்க ஆகஸ்றேபிளையர் வாழ்கக் கிருபைசெய் தருளுமையா கிறிஸ்துவே யேசுநாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadhamae Kirupaiyuntaana Kaalamae Allaelooyaa Maesiyaavinaal Visu Vaasanaesarmael Allaelooyaa - Aaseer 1.thanthai Thiruppaalan Athivinthai Manuvaelan Saathiyaaruda Theethumaarida Maathu Maamariyaalidam Vandha Aa. Allae 2. Kaattolivath Tharunaamae Kottaan Kunjsugalaamae (aesaa. 43:20) Meettukkonda Thaevaattuk Kuttiyin Paattukkum Pattapaattukkun Thuthi Aa. Allae 3. Utthama Podhakamaar Oru Mitthuvan Thothiyanaer Suttha Suvisaeda Njaanavaakkiyam Etthanai Yetthanai Yaanapaakkiyam Aa. Allae 4. Satthiya Raajaanggam Thazhaith Thetthisaiyu Mongga Sitthamaana Thiruvulach Seyal Atthiyandha Vaanandha Santhosham Aa. Allae 5. Atsayamaaga Misiyon Thatsakar Vaazha Thetsanaayana Muttharaayanam Ecchapaigalum Perugap Peruga Aa. Allae 6. Sitthirakoodam Polae Thiratthitum Asthi Vaaratthaalae Thaesamengganum Vaedham Vilanggavum Thaevaalayanggal Pirasangga Muzhanggavum Aa. Allae 7. Arumaiyaalarae Kiristhuvuk Kurimaiyaalarae Thirunellai Vaedhanaayakan Paattuth Thaevakumaaranukkaana Kontaattu Aa. Allae Thaevaaram Thirunellai Yaathiyaayth Then Katal Vatakatal Mattaagap Perukiya Sapaiyin Thaevas Thalanggalum Perukkamaaki Ariyasar Kurumaarongga Aagasraepilaiyar Vaazhkak Kirupaisey Tharulumaiyaa Kiristhuvae Yaesunaathaa