பாடல் #39270
நீதிமானானேனையா உம்மாலே
🔤 Neethimaanaanaenaiyaa Ummaalae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதிமானானேனையா உம்மாலே நான் நீதிமானானேனையா சோதிநவ யேருசாலேமின் மேவிய தோன்றல் பராபரனின் சமூகஞ் செல்ல 1.ஆதியில் ரட்சிப்பின் வார்த்தை யறைந்ததால் அப்படியே மனுவாகப் பிறந்ததால் சாதியனைத்துக்கு மாகவிறந்ததால் சத்திய வேதத்தைத் தந்து சிறந்ததால் 2. ஆற்றுமத்தாலும் சரீரத்தினாலும் ஆதிபராபரன் சித்தத்தினாலும் சாற்றரும் பாடுகள் ஏற்றத்தினாலும் சாவை விழுங்கிக் கெலித் துயிர்த்ததாலும் 3. சர்ப்பத் தரத்தை யுடைத்தத்தினாலும் தாழ்நரகத்தை யடைத்தத்தினாலும் முற்பவம் போகத் துடைத்தத்தினாலும் மோக்கிட வாழ்வெனக்குக் கிடைத்தத்தாலும் 4. துங்கமிகும் ஞானஸ்நானத்தினாலும் தூயதிவ்விய நன்மைப் பாத்திரத்தாலும் எங்குமிஸ்பிரீத்துவின் சுத்தத்தினாலும் யேசுவென்ற திருநாமத்தினாலுமே. 5. வித்தக ஞானப் பிரசாதத்தினாலும் வேதநாயகன் சங்கீதத்தினாலும் சுத்த சுவிசேட போதத்தினாலும் தோன்றுந் தேவாசீர் வாதத்தினாலுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethimaanaanaenaiyaa Ummaalae Naan Neethimaanaanaenaiyaa Sothinava Yaerusaalaemin Maeviya Thondral Paraabaranin Samooganj Sella 1.aathiyil Ratsippin Vaartthai Yaraindhathaal Appatiyae Manuvaagap Pirandhathaal Saathiyanaitthukku Maagavirandhathaal Satthiya Vaedhatthaith Thanthu Sirandhathaal 2. Aarrumatthaalum Sareeratthinaalum Aathibaraabaran Sitthatthinaalum Saartrarum Paatugal Aertratthinaalum Saavai Vizhungkik Kelith Thuyirtthathaalum 3. Sarppath Tharatthai Yutaitthatthinaalum Thaazhnarakatthai Yataitthatthinaalum Murpavam Pogath Thutaitthatthinaalum Mokkida Vaazhvenakkuk Kitaitthatthaalum 4. Thunggamikum Njaanasnaanatthinaalum Thooyathivviya Nanmaip Paatthiratthaalum Engkumispireetthuvin Sutthatthinaalum Yaesuvendra Thirunaamatthinaalumae. 5. Vitthaka Njaanap Pirasaadhatthinaalum Vaedhanaayakan Sangkeedhatthinaalum Suttha Suvisaeda Podhatthinaalum Thonrun Thaevaaseer Vaadhatthinaalumae