பாடல் #39260
ஓம் நமாவே யனாதி
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
ஓம் நமாவே யனாதி ஓம் நமாவே ஓம் நமா அல்பா ஒமேகா ஓரே யோவாவே ஆமனா ஓம் ஓசியன்னா ஓம் அல்லேலுயாவே 1.அந்தர சொற்கம் புவியுந்தந்த பரப்பிரமா புவி மைந்தர் பாதகந் தவிர்க்க வந்த கிருபைச்சீமா - ஓம் 2. தற்சுய சுயம்பிரகாச முப்பொருளசரீரி அருள் அட்சய நிச்சய அற்புதப் பிரதானா சாரி - ஓம் 3. அளவிலா நன்மைச் சொரூபானந்த சந்தோடா கன வளமிகும் பரிசுத்த சத்தியவாசகச் சுவிசேடா - ஓம் 4. ஆதியே யரூபியே யாண்ட பரமேசுரா மெய்த் தாதையே சுயாதிப தயாபர சருவேசுரா - ஓம் 5. மாறிலா வுன்னத மகத்துவத் திரியேகா ஓ ராறு லட்சணப்பிரதாப ஆரணப்பிரவ டீகா - ஓம் 6. சந்ததஞ் சந்ததஞ் சரண் தந்தருள் கிறிஸ்தையா நித்திய வந்தனம் வந்தனம் பராபர வஸ்து மேசையா - ஓம் 7. வேதநாயகன் சந்தப்பா விந்தைப்பாவே யேசு மேசியா தந்தையர் நமக்குச் சொந்தப்பாவே - ஓம்