பாடல் #39257
ஒரு தேவாதிப திரிலோகா திப
🔤 Oru Thaevaathiba Thirilokaa Thiba
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு தேவாதிப திரிலோகா திப ஒரு யோவாவென நினைமனமே திரு நாமவிசேட தேவ திரியேகமே திருவுளமாக அருள் தரவே - ஒரு 1.அருவுரு நித்தியானந்த ஆகாயத் தெழுந்த பரமனார் தந்த வொரே ஞானாதிக்க மரிகருவாக வந்த நரபக்கிஷாதிப சரண் மலர் தானண்டியருள் பெறவே - ஒரு 2. தேவதி சயசத்திய வேத மெஞ்ஞான துத்திய சீவனாதி கருத்தர் திருவாக்கே ஏவையிஸ்திரி வித்தான யேசுக்கிறிஸ்துனக்குண் டேங்காதே யேங்காதே யிருதினமே - ஒரு 3. ஆதியனாதி வஸ்து ஆவைகன்னி யாஸ்திரிவித்து பாவி நீ கரிசித்துச் சந்தோஷித்து வேதநாயகன் சொன்ன ஞானப்பதங்கள் பாடி மேசியாவைக் கூடியிரு தினமே - ஒரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Thaevaathiba Thirilokaa Thiba Oru Yovaavena Ninaimanamae Thiru Naamavisaeda Thaeva Thiriyaegamae Thiruvulamaaga Arul Tharavae - Oru 1.aruvuru Nitthiyaanandha Aakaayath Thezhundha Paramanaar Thandha Vorae Njaanaathikka Marigaruvaaga Vandha Narapakkishaathiba Saran Malar Thaanantiyarul Peravae - Oru 2. Thaevathi Sayasatthiya Vaedha Menjnjaana Thutthiya Seevanaathi Karutthar Thiruvaakkae Aevaiyisthiri Vitthaana Yaesukkiristhunakkun Taengkaathae Yaengkaathae Yiruthinamae - Oru 3. Aathiyanaathi Vasthu Aavaiganni Yaasthirivitthu Paavi Nee Karisitthuch Santhoshitthu Vaedhanaayakan Sonna Njaanappathanggal Paati Maesiyaavaik Kootiyiru Thinamae - Oru