பாடல் #39256
திரிதத்துவனே யொரு தேவனே
🔤 Thiridhatthuvanae Yoru Devanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரிதத்துவனே யொரு தேவனே செய சத்துவனே வருசீவனே திடநற் கிறிஸ்தாதி குமாரனே பர தேவ சே யோவாவே மறையானே யிறையானே வாய்ந்த சாந்தகு ணேந்திரனே வாகனே யூகனே மனுவோர்க் கருடர வந்தவனே வலிமை யினாசனனே மகத்துவனே பலபவ மோசனனே பரத்துவனே வடிவங் கொண்டெனையாள வந்தகு தாமேசியாவே - திரி 1.அறிவினிலுயராதி பராபரா அதிசய அபிதான குணாகரா அளவிட அரிதான நிராதாரா சுர ஆதன வானகரா அம்பரா எம்பரா அந்தத் தந்தச் சுந்தரா ஆதரா சோதரா அசராசர தாபரசிரா அருளாகர பாரவ கோசரா தெருளீகர மாபரமே சுரா அகோர சத்துருசங்காரா கிருபாகர மித்துரு சிங்காரா - திரி 2. பரவெளியுரு வான சரீரியே பவவிருளற வானிறை மாரியே பல வரமருள் ஞான வுதாரியே யுயர் பாவலர் கேசரியே பரிவாயே தெரிவாயே பக்கிஷ விந்தைத்தயை புரியே பாரியே தாரியே பயமே தடுத் தெனையாதரியே பரலோக நிதானதி காரியே நரலோக கிருபாநதி வாரியே பரம்பர மந்திரி யனுசாரி கரி பரம தந்திரி யாசாரி - திரி 3. கருணையின் வதனா வொருவாமனா கடவுளர் சுதனா திருநாமனா கதிதருசாதனா வருவாமனா சிவ காரண வான மனா கனமானா தனவானா கர்த்தத்துவ ராசமனா காயனா நாயனா கலனா கவினா கலைக்கியானா கலிமோசன நேசவிலோசனா வலியாசன வாசவு லாசனா காதலனே யென தெசமானிகவி வேதநாயகன் வெகுமானி - திரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiridhatthuvanae Yoru Devanae Seya Satthuvanae Varuseevanae Thidanar Kiristhaathi Kumaaranae Para Thaeva Sae Yovaavae Maraiyaanae Yiraiyaanae Vaayndha Saandhaku Naenthiranae Vaaganae Yooganae Manuvork Karudara Vandhavanae Valimai Yinaasananae Makatthuvanae Palapava Mosananae Paratthuvanae Vativang Kontenaiyaala Vandhaku Thaamaesiyaavae - Thiri 1.ariviniluyaraathi Paraabaraa Athisaya Apithaana Kunaagaraa Alavida Arithaana Niraathaaraa Sura Aadhana Vaanakaraa Ambaraa Embaraa Andhath Thandhach Sundharaa Aadharaa Sodharaa Asaraasara Thaabarasiraa Arulaagara Paarava Kosaraa Theruleegara Maabaramae Suraa Akora Satthurusangkaaraa Kirupaagara Mitthuru Singkaaraa - Thiri 2. Paraveliyuru Vaana Sareeriyae Pavavirulara Vaanirai Maariyae Pala Varamarul Njaana Vuthaariyae Yuyar Paavalar Kaesariyae Parivaayae Therivaayae Pakkisha Vinthaitthayai Puriyae Paariyae Thaariyae Payamae Thatuth Thenaiyaadhariyae Paraloga Nithaanathi Kaariyae Naraloga Kirupaanathi Vaariyae Parambara Manthiri Yanusaari Kari Parama Thanthiri Yaasaari - Thiri 3. Karunaiyin Vathanaa Voruvaamanaa Katavular Sudhanaa Thirunaamanaa Kathidharusaadhanaa Varuvaamanaa Siva Kaarana Vaana Manaa Kanamaanaa Thanavaanaa Kartthatthuva Raasamanaa Kaayanaa Naayanaa Kalanaa Kavinaa Kalaikkiyaanaa Kalimosana Naesavilosanaa Valiyaasana Vaasavu Laasanaa Kaadhalanae Yena Thesamaanigavi Vaedhanaayakan Vekumaani - Thiri