பாடல் #39255
ஆதியத்தனான சத்திய
🔤 Aathiyatthanaana Satthiya
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியத்தனான சத்திய வேதகத்தனே ஆறுலட்சணப் பிரதாபதீத நித்தனே மாதொருத்தியாலு தித்த தேவ சித்தனே மாசகற்றியே திடத்தியாள் பரிசுத்தனே - ஆதி 1.மந்திர செபங்களின் பரா பரத்துவமே மங்கள சங்கீர்த்தனத் தொரே திரித்துவமே சுந்தரக் கிறிஸ்துவுக்குளேக தத்துவமே சுவாமி தயாபரபிதா மகத்துவமே - ஆதி 2. ஞானமற்ற ஈன வக்கியான மக்கவே நாலு திக்குமே குருக்களே பெருக்கவே வானமுற்ற மேன்மை மக்களோ டிருக்கவே மாச கற்றியாளுருக்க மாயிரக்கமே - ஆதி 3. சாதிகளெல்லா மகிழ்ந் தொன்றாய்ப் பிழைக்கவே சத்திய கிறிஸ்தவரெலாந் தழைக்கவே வேதநாயகன் கவிக் கண்ப்பார் செழிக்கவே மேன்மைசெய் பிசாசையடி யோடழிக்கவே- ஆதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyatthanaana Satthiya Vaedhakatthanae Aarulatsanap Pirathaabatheedha Nitthanae Maathorutthiyaalu Thittha Thaeva Sitthanae Maasakarriyae Thidatthiyaal Parisutthanae - Aathi 1.manthira Sebanggalin Paraa Paratthuvamae Manggala Sangkeertthanath Thorae Thiritthuvamae Sundharak Kiristhuvukkulaega Thatthuvamae Suvaami Thayaabarapithaa Makatthuvamae - Aathi 2. Njaanamartra Eena Vakkiyaana Makkavae Naalu Thikkumae Kurukkalae Perukkavae Vaanamurtra Maenmai Makkalo Tirukkavae Maasa Karriyaalurukka Maayirakkamae - Aathi 3. Saathigalellaa Makizhn Thonraayp Pizhaikkavae Satthiya Kiristhavarelaan Thazhaikkavae Vaedhanaayakan Kavik Kanppaar Sezhikkavae Maenmaisey Pisaasaiyati Yodazhikkavae- Aathi