பாடல் #39254
ஆதி திரித்துவமே யெனை
🔤 Aathi Thiritthuvamae Yenai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதி திரித்துவமே யெனை யாள் மகத்துவமே சோதி யொருத்துவப் பிதாச் சுதனுமாவியு மாகத் தோன்றும் நித்தியத்தின் மூன்று பொருளொன்றான - ஆதி 1.சத்தியப் பரமதேவா அளவில்லாத சகல நன்மைச் சொரூபா முத்தி தருமொரே யோவா முடிவிலாத மோட்சராச்சியப் பிரதாபா பத்தர் பணியும் பரிசுத்த ஞானப்பர்த்தாவே பக்கிஷமே நிறைந்த முக்கியகிருபைக்கத்தாவே - ஆதி 2. திஷ்டிதிதி சங்காரா உலக ரட்சை செய்தருளுஞ் சிங்காரா இஷ்ட மிகுமுதாரா வானதிகாரா ஏழையடியர்க் காதாரா மட்டில்லா துயர்ந்த மகிமைத்திருக் குமாரா மாசதற்ற பரிசுத்த நரவதாரா - ஆதி 3. பாவிக்கிரங்குந் தஞ்சமே பரதபிக்கப் படவைக்குது பிரவஞ்சமே சாவிற்கொடிய வஞ்சமே பிசாசு செய்யும் தந்திரத்தாலென் னெஞ்சமே மாவிதனபடாமற் காருமொஇரட்சகா மனதுகந் தருட்கண் பாரும் சர்வ தட்சகா - ஆதி 4. வல்லமைக் கிருபாசனா துயரடைந்த மைந்தர் பவ விமோசனா துல்லிப ஞானப்போசனா நித்தியகாலந் தோத்திரந் தோத்திர மோசனா வெல்லைப்பதியில் வந்த மேசியாமனாவே வேதநாயகன் தன் பாட்டைச் சொலுமெனாவே - ஆதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathi Thiritthuvamae Yenai Yaal Makatthuvamae Sothi Yorutthuvap Pithaach Sudhanumaaviyu Maagath Thonrum Nitthiyatthin Moonru Porulonraana - Aathi 1.satthiyap Paramathaevaa Alavillaadha Sakala Nanmaich Soroopaa Mutthi Tharumorae Yovaa Mutivilaadha Motsaraachsiyap Pirathaapaa Patthar Paniyum Parisuttha Njaanappartthaavae Pakkishamae Niraindha Mukkiyakirupaikkatthaavae - Aathi 2. Thishtithithi Sangkaaraa Ulaka Ratsai Seytharulunj Singkaaraa Ishta Mikumuthaaraa Vaanathikaaraa Aezhaiyatiyark Kaathaaraa Mattillaa Thuyarndha Makimaitthiruk Kumaaraa Maasathartra Parisuttha Naravathaaraa - Aathi 3. Paavikkirangkun Thanjjamae Parathapikkap Patavaikkuthu Piravanjjamae Saavirkotiya Vanjjamae Pisaasu Seyyum Thanthiratthaalen Nenjjamae Maavidhanapataamar Kaarumoiratsakaa Manathugan Tharutkan Paarum Sarva Thatsakaa - Aathi 4. Vallamaik Kirupaasanaa Thuyarataindha Maindhar Pava Vimosanaa Thulliba Njaanapposanaa Nitthiyakaalan Thotthiran Thotthira Mosanaa Vellaippathiyil Vandha Maesiyaamanaavae Vaedhanaayakan Than Paattaich Solumenaavae - Aathi