பாடல் #39252
தமி யோர்க்கருள் செய்யும
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
தமி யோர்க்கருள் செய்யும ரூபி சமஸ்த நன்மைச் சொரூபி அரூபி அமலா அருவுருதற் பரம திரித்துவ மகிமைத்திரு முதலே அம்பரா அனாதி மெய்ச்சிதம்பரா கருணாம்பர மேதுதி 1.காரணத்திரு அருளே-காட்சிப்பரம் பொருளே ஆரண சுந்தரமே நிரந்தரமே சுதந்தரமே பதம் துணையே பூரண உத்தம ஆறுதலேயுதாரண நித்திய தேறுதலே புகழும் புது மனதில் கன பணிவில் பொறை மிகு சற்குண முறவே புனிதா கிருபைப்பத் ராசனுதா உனதா உனதருள் புரி - தமி 2. ஆகமகலை க்யானி அதிசயத்தொரு ஞானி ஏகமறை நிதானி அவதானி வெகுமானி அக்கினி மேனி வேகத் தெமை மகிழ்ந் தாற்றுவையே என் தேகப்-பவவினை மாற்றுவையே விடிவே விடநரகக் கொடியபவக் கடணுலையத் திடனருளே மேன்மைப் பிரதாப மகத்துவ பான்மைக் கிருபாநதியே துதி - தமி 3. நித்திய திரித்துவவே நெசத்ததி நவமே துத்திய மகத்துவமே வழுத்துவமே ஒருத்துவமே பரத்துவமே சத்திய உத்தமதாபரமே கனவெற்றி யளித்த பராபரமே தருணம் சதிவினை சற்பினை களறக் கதிவழியில் புக அருளே சதிராய் வேதநாயகன் அதிராய்க்கவி சொல் கருணாம்பரம் - தமி