பாடல் #39249
உன்னதத்துக் கெழுந்தாரே
🔤 Unnathatthuk Kezhunthaarae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்துக் கெழுந்தாரே சுநாதர் மெய்யாக 1.மன்னவன்றவிது வங்கிஷத்திந் நிலம் புரக்க வந்த அன்னைமரி கன்னியிடம் அற்புதமாய் உற்பவித்த மனுடவ தாரனதி காரனுபகாரன் கனதீரன் மாதாவு கந்து தொழும் வேதானந்தக் குமாரன் வந்தனமென்றதி சுந்தர விந்தையின் மைந்தர் மகிழ்ந்து புகழ்ந்து பணிந்திட வரிசை வரிசையுடனரு கினிரு புறமு முரிய வலமை மிகு பரம சுரர் பரவ வாகாய் மகத்துவ மீறி மேகாசனத்திலேறி. - உன் 2. சத்துரு பசாசை வென்று வெற்றிமுடி சூடியே எத்திசை யுளோரும் வாழ்த்தச் சித்த மிக நீடியே தரும குணாலனிரு நூலனனு கூலன் மனுவேலன் தாதைப் பராபரனா ரொரு நீதிக் குமார மனோலன் தற்பர சிற்பர மெய்பர அற்புத முப்படி யொப்புருவப் பெருமைப் பொருள் சருவ வலமை செறி பொறுமை மிகு பெரிய கிருபையுடையவ ரோடுறு தியினிலுறையத் தானே யுயிர்த்து மீளவானே சயத்திலாள. - உன் 3. அண்டமுங் குலுங்கப் பரமண்டல மிலங்கவே கண்டகர் கலங்க நெறி கொண்டவர் துலங்கவே அதிசய வானே யருளானே மறையானே யிறையோனே ஆதிசுயம் பிரகாச நீதிப் பரம கோனே அஞ்சலி நன்செப விஞ்சையர் நெஞ்சக மிஞ்சிய சஞ்சல மெஞ்ச விறைஞ்சவும் அதிக வலமையொடு துதிகள் மிகுதியெழ விதியினெருசலை யிலுதைய மிடிரவிபோ லைநூற்று வரும் போற்ற விண்ணாற்றிற் கரையேற்ற - உன் 4. தந்தையு மரூபியாரும் வந்தெதிர் சந்திக்கவே பந்தி பந்தியாய்ச் சுரர் பணிந்தடி வந்திக்கவே சரா சரியாகத்திரியேக வல பாகத்தினி லேக சாலோக பதங்கட்கும் மேலான பரலோக சங்க முழங்கிய துங்க மிகுங்கன மங்கள விங்கிதலங் கிரு தங்கொடு தரு சத்திய முனிவர் தெரிசித்தடிபணியப் பரிசுத்தரூ பிதனை வரிசித்தருள் பொழிய சாதியெலாங் கொண்டாட வேதநாயகன் பாட - உன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthuk Kezhunthaarae Sunaadhar Meyyaaga 1.mannavandravithu Vangkishatthin Nilam Purakka Vandha Annaimari Kanniyidam Arpudhamaay Urpavittha Manudava Thaaranathi Kaaranubakaaran Kanatheeran Maathaavu Kanthu Thozhum Vaethaanandhak Kumaaran Vandhanamendrathi Sundhara Vinthaiyin Maindhar Makizhnthu Pugazhnthu Paninthida Varisai Varisaiyudanaru Kiniru Puramu Muriya Valamai Miku Parama Surar Parava Vaakaay Makatthuva Meeri Maekaasanatthilaeri. - Un 2. Satthuru Pasaasai Venru Verrimuti Sootiyae Etthisai Yulorum Vaazhtthach Sittha Miga Neetiyae Tharuma Kunaalaniru Noolananu Koolan Manuvaelan Thaathaip Paraabaranaa Roru Neethik Kumaara Manolan Tharpara Sirpara Meypara Arpudha Muppati Yoppuruvap Perumaip Porul Saruva Valamai Seri Porumai Miku Periya Kirupaiyutaiyava Roturu Thiyiniluraiyath Thaanae Yuyirtthu Meelavaanae Sayatthilaala. - Un 3. Andamung Kulunggap Paramandala Milanggavae Kandakar Kalangga Neri Kondavar Thulanggavae Athisaya Vaanae Yarulaanae Maraiyaanae Yiraiyonae Aathisuyam Pirakaasa Neethip Parama Konae Anjjali Nanseba Vinjsaiyar Nenjjaka Minjsiya Sanjjala Menjja Virainjjavum Athiga Valamaiyotu Thuthigal Mikuthiyezha Vithiyinerusalai Yiluthaiya Mitiravipo Lainoorru Varum Portra Vinnaarrir Karaiyaertra - Un 4. Thanthaiyu Maroopiyaarum Vanthethir Santhikkavae Panthi Panthiyaaych Surar Panindhati Vanthikkavae Saraa Sariyaagatthiriyaega Vala Paagatthini Laega Saaloga Pathanggatkum Maelaana Paraloga Sangga Muzhangkiya Thungga Mikunggana Manggala Vingkidhalang Kiru Thangkotu Tharu Satthiya Munivar Therisitthatibaniyap Parisuttharoo Pidhanai Varisittharul Pozhiya Saathiyelaang Kontaada Vaedhanaayakan Paada - Un