பாடல் #39246
பரத்தின் முகிலினா
🔤 Paratthin Mukilinaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரத்தின் முகிலினா சனத்தி லெழுந்தனர் பரம கிறிஸ்து நாதரருள் மிகுநீதர் உரத்த வலபத மெடுத்து நலமுடன் உயர்த்த அதிரொலி யதிர்த்து மிக வெழ உண்டே மங்கள மெங்கு முழங்க கண்டா கண்டனினன்பு விளங்கவிண் - பர 1.சிரத்தின பரஞ்சியின்றிட்ட மவர் திருக் கண்களு மெரிந்த செங்கதி ரோனிட்டங் கரத்திந்தற் சீசினி ரத்தினச் சட்ட மேசு கருணை யிரட்சக ரென்ற அபிதானப் பட்ட முரைத் தான் மனோவாக்குக் கெட்டாத ஞாய முயர்ந்தாதர அடைக்கலத் தைந்து காயம் நரர்க் காகவே துடங்கியமிகு நேயம் நவ சேனைகள் வணங்கிட நயத் தேயம் நம்பு தவத்தினர் நெஞ்சு களிக்க ஞான பரிசுத்தாவி யளிக்க அன்பு மிகுந்த வரங்க டெளிக்க ஆகடியக் கடியஞ்சி யொளிக்க. - பர 2. யூதாவின் கோத்திரச் சிங்கஞ் சாஸ்திர முயர்ந்த கிருபைச் சுவிசேட பிரசங்கம் ஆதார மோக்கிடத் துங்கம் அரு ளானந்த தைந் நூறு சீடரொரு சங்கந் தாதா வுன்பாத மேதஞ் சமென்று தாழ்ந்தே பணிந்தார்கள் வளைந்து நின்று வேதாந்தனு மாசீர் வாதங் கணன்று மிகுத் தேயளித் தெழுந்தாரு யர்ந் தகுன்று விபுதர் வளைந் தொரு மேகங் கொண்டும் வீணைகளுஞ் சங்கீதந் தண்டும் செப தவம் விண்ட சம்பிரதாயங் கண்டும் தேவன் மகிழ்ந்து மதிசய முண்டும் - பர 3. அன்னை மரியம்மாள் பாலன் மனுட னாகப் பிறந்து பெலியான அனுகூலன் மன்னன் செங் கோனித்திய காலன் சீயோன் மகளடி பணிந்திடுமோ ஞானசீலன் உன்னத மான பராபரனின் வலத்தின் மேவ ஊழியு மூன்று லோகத் தோருந் தோத்திரங் கூவத் தன்னிகரில் லான் சிஷ்டி யாவுக்கு மேற்றாவச் சக்கரா திபதியாக முக்கிய மோடு தேவ சற்குரு தற்பர சத்திய சித்தன் விக்கிரகத்தை யழித்த மனத்தன் துற் கடியுச் சிமிதித்த பதத்தன் உக்கிர மிகுத்த மகத்துவ கர்த்தன். - பர 4. தக்கணத் தேவ சகாயன் ஞான சாஸ்திரக்கவி சொல் வேதநாயக சேயன் பக்கிஷமாய்த் தொழு தூயன் தேவ பரமண்டலாதிபதி பர ரோக நாயன் முக்கிய வேத வாக்குத்தத்தங் களெல்லாங் கூறி முத்தியி லுயர் பரிசுத்த வெண்ரூபு மாறிச் சக்கிய மொடு சொலு துத்திய மிக மீறிச் சருவ மகிமை யொலி வேற்றுமலை யிலேறித் தண்டமிழ் கொண்டு மகிழ்தெழு சந்தன் வண்டர் மிரண்டு பணிந்திடு தந்தன் தொண்டர்கள் கண்டு தொடர்ந்த அனந்தன் மண்டலம் விண்ட பரன்றிரு மைந்தன்.- பர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paratthin Mukilinaa Sanatthi Lezhundhanar Parama Kiristhu Naadhararul Mikuneedhar Urattha Valapatha Metutthu Nalamudan Uyarttha Athiroli Yathirtthu Miga Vezha Untae Manggala Mengku Muzhangga Kantaa Kandaninanpu Vilanggavin - Para 1.siratthina Paranjsiyinritta Mavar Thiruk Kankalu Merindha Senggathi Ronittang Karatthindhar Seesini Ratthinach Satta Maesu Karunai Yiratsaka Rendra Apithaanap Patta Muraith Thaan Manovaakkuk Kettaadha Njaaya Muyarnthaadhara Ataikkalath Thainthu Kaayam Narark Kaagavae Thudangkiyamiku Naeyam Nava Saenaigal Vanangkida Nayath Thaeyam Nampu Thavatthinar Nenjsu Kalikka Njaana Parisutthaavi Yalikka Anpu Mikundha Varangga Telikka Aagatiyak Katiyanjsi Yolikka. - Para 2. Yoothaavin Kotthirach Singganj Saasthira Muyarndha Kirupaich Suvisaeda Pirasanggam Aathaara Mokkidath Thunggam Aru Laanandha Thain Nooru Seedaroru Sanggan Thaathaa Vunpaadha Maedhanj Samenru Thaazhnthae Paninthaarkal Valainthu Ninru Vaethaandhanu Maaseer Vaadhang Kananru Mikuth Thaeyalith Thezhunthaaru Yarn Thakunru Vipudhar Valain Thoru Maegang Kontum Veenaigalunj Sangkeedhan Thantum Seba Thavam Vinda Sampirathaayang Kantum Devan Makizhnthu Mathisaya Muntum - Para 3. Annai Mariyammaal Paalan Manuda Naagap Piranthu Peliyaana Anukoolan Mannan Seng Konitthiya Kaalan Seeyon Makalati Paninthitumo Njaanaseelan Unnatha Maana Paraabaranin Valatthin Maeva Oozhiyu Moonru Logath Thorun Thotthirang Koovath Thannigaril Laan Sishti Yaavukku Maerraavach Sakkaraa Thibathiyaaga Mukkiya Motu Thaeva Sarkuru Tharpara Satthiya Sitthan Vikkirakatthai Yazhittha Manatthan Thur Katiyuch Simithittha Pathatthan Ukkira Mikuttha Makatthuva Kartthan. - Para 4. Thakkanath Thaeva Sakaayan Njaana Saasthirakkavi Sol Vaedhanaayaka Saeyan Pakkishamaayth Thozhu Thooyan Thaeva Paramandalaathibathi Para Roga Naayan Mukkiya Vaedha Vaakkutthatthang Kalellaang Koori Mutthiyi Luyar Parisuttha Venroopu Maarich Sakkiya Motu Solu Thutthiya Miga Meerich Saruva Makimai Yoli Vaerrumalai Yilaerith Thandamizh Kontu Makizhthezhu Sandhan Vandar Mirantu Paninthitu Thandhan Thondarkal Kantu Thodarndha Anandhan Mandalam Vinda Paranriru Maindhan.- Para