பாடல் #39242
நீதியின் ராசாவுயிர்த்தார்
🔤 Neethiyin Raasaavuyirtthaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் ராசாவுயிர்த்தார் நித்தியமும் அல்லேலூயா. வேத நிறை வாகக் கண்டு வேதாளத்தைச் செயங் கொண்டு. - நீதி 1.பொந்தி பிலாத்து முன்னின்று பொறுமை யொடுகருணைகள் கொள் கடவுளர் (பொந்தி) புருவை யெனவடர் கொடியதுய ரெழப் (பொந்தி) போதத் துயர் வேதப்படி பல வாதைப்பட நீதிக் கிணை சொலப் (பொந்தி) பூதலத் தோர் வினைக்கென்று நிந்தையின் குழியிற்சென்று நீடு ஞாயிற் றினன்று. - நீதி 2. மாதர்கள் வந்தனமாக மனதி னிடை வலுகவலை பெருகிட (மாதர்கள்) மருகி யெருசலை நகரியதின் வழி (மாதர்கள்) வந்தொப் பொடு யர்ந்தப் பரிமள கந்தப் பொடி தந்திட்டடி தொழ (மாதர்கள்) மாசில்லான் கல்லறைக் கேக தூதர்களறைந்து போகச் சோதியாய்க் காத்தோர் முன்பாக. - நீதி 3. சீடர்க தெரிசித் தேற்றத் திடவினொடு புடவிய துமகிழவே (சீடர்கள்) செயமுமுயர் கன பெருமை நிறையுள (சீடர்கள்) செங் கோற்றிற மங்காக் கடனவ சங்கோர்க்கு மடங்காப் பொருளென (சீடர்கள்) தேவ சம்மன சோர் போற்ற நாடகர் பதங்கள் சாற்ற ஞாலத்தின் சாபத்தை மாற்ற. - நீதி 4. வேத வாசகங்கள் நீட விமல னொரு திரு முதல் வனருளிய (வேத வாசக) மிகவு மதுர கிருபையின திரச (வேத வாசக) மேலாம் பதமே தருமிங்கித நூலாங் கலையாகம சங்கீத (வேத வாசக) வேதநாயகன் பாப் பாடப் பாதகர் தீ தெல்லா மோடப் பரம நன்மை யாவுங்கூட. - நீதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Raasaavuyirtthaar Nitthiyamum Allaelooyaa. Vaedha Nirai Vaagak Kantu Vaethaalatthaich Seyang Kontu. - Neethi 1.ponthi Pilaatthu Munninru Porumai Yotugarunaigal Kol Katavular (ponthi) Puruvai Yenavatar Kotiyathuya Rezhap (ponthi) Podhath Thuyar Vaedhappati Pala Vaathaippata Neethik Kinai Solap (ponthi) Poodhalath Thor Vinaikkenru Ninthaiyin Kuzhiyirsenru Neetu Njaayir Rinanru. - Neethi 2. Maadharkal Vandhanamaaga Manathi Nitai Valugavalai Perukida (maadharkal) Maruki Yerusalai Nakariyathin Vazhi (maadharkal) Vanthop Potu Yarndhap Parimala Kandhap Poti Thanthittati Thozha (maadharkal) Maasillaan Kallaraik Kaega Thoodharkalarainthu Pogach Sothiyaayk Kaatthor Munpaaga. - Neethi 3. Seedarka Therisith Thaertrath Thidavinotu Pudaviya Thumakizhavae (seedarkal) Seyamumuyar Kana Perumai Niraiyula (seedarkal) Seng Korrira Mangkaak Katanava Sangkorkku Matangkaap Porulena (seedarkal) Thaeva Sammana Sor Portra Naadakar Pathanggal Saartra Njaalatthin Saabatthai Maartra. - Neethi 4. Vaedha Vaasakanggal Needa Vimala Noru Thiru Mudhal Vanaruliya (vaedha Vaasaka) Migavu Mathura Kirupaiyina Thirasa (vaedha Vaasaka) Maelaam Pathamae Tharumingkidha Noolaang Kalaiyaagama Sangkeedha (vaedha Vaasaka) Vaedhanaayakan Paap Paadap Paadhakar Thee Thellaa Modap Parama Nanmai Yaavungkooda. - Neethi