பாடல் #39241
வந்தனம் வந்தன
🔤 Vandhanam Vandhana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தனம் வந்தன மெந்தை பராபரன் மைந்தனெம் சுதனே சந்ததம் சந்ததமார்த்தனங் கோவே அனந்த அனந்த சங்கீர்த்தனம் தேவே. 1.தந்தையதம் செய்யகந்தை யறும்படி வந்து பூதலமே நிந்தையுடன் கொலைப்பட்டு மடிந்தார் உந்து தினம் திரியத்தி லெழுந்தார். - வந் 2. தேவபரன் சுதன் மானிடர் பாதகம் தீரவே பெலியாய் சீவனை விட்டடக் குண்ட மூன்றாம் நாள் செங்கதி ரென்ன உயிர்த் தெழுந்தாரே. - வந் 3. ஆதித்த வாரத்தில் பூமியதிர்த்தல தாயதிர்ந்திடவே சோதிப் பிரவையாகக் கிறிஸ்து உயிர்த்தார் பூத பசாசைத் துணித்து செயித்தார். - வந் 4. மிக்க பராபரன் தூதன் ஒரு தன்விண் மேலிருந்துலகில் மின்னலைப் போலுருவ முன்னவெழுந்தான் மின்னுமுடை வெண்மையென்ன அணிந்தான். - வந் 5. கல்லறை வாயிடை மூடியிருந்த கனத்த கல்பிரட்டி அல்ல லற்றங்கதின் மீது ளுக்கார்ந்தான் புல்லர் பயந்து விழச்சுரன் சேர்ந்தான். - வந் 6. விம்மி விம்மிச் சில மாதர் துயருற மேவி நிற்கவுமே எம்மிறைவன் முதலே யெழுந்தானே என்று சம்மனசு தான் மொழிந்தானே. - வந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vandhanam Vandhana Menthai Paraabaran Maindhanem Sudhanae Sandhatham Sandhathamaartthanang Kovae Anandha Anandha Sangkeertthanam Thaevae. 1.thanthaiyatham Seyyakanthai Yarumbati Vanthu Poodhalamae Ninthaiyudan Kolaippattu Matinthaar Unthu Thinam Thiriyatthi Lezhunthaar. - Van 2. Thaevaparan Sudhan Maanidar Paadhakam Theeravae Peliyaay Seevanai Vittatak Kunda Moonraam Naal Senggathi Renna Uyirth Thezhunthaarae. - Van 3. Aathittha Vaaratthil Poomiyathirtthala Thaayathirnthidavae Sothip Piravaiyaagak Kiristhu Uyirtthaar Poodha Pasaasaith Thunitthu Seyitthaar. - Van 4. Mikka Paraabaran Thoodhan Oru Thanvin Maelirunthulakil Minnalaip Poluruva Munnavezhunthaan Minnumutai Venmaiyenna Aninthaan. - Van 5. Kallarai Vaayitai Mootiyirundha Kanattha Kalpiratti Alla Lartranggathin Meethu Lukkaarnthaan Pullar Payanthu Vizhachsuran Saernthaan. - Van 6. Vimmi Vimmich Sila Maadhar Thuyarura Maevi Nirkavumae Emmiraivan Mudhalae Yezhunthaanae Enru Sammanasu Thaan Mozhinthaanae. - Van