பாடல் #39235
எனது பிராண நாயக
🔤 Enathu Piraana Naayaka
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது பிராண நாயக னெழுந்தருளினானின்று எக்களிப்பாய் மனமே. கனமு மனதினுற் பனமு மறிந்தவன் கடவுளேசு நாயக சுவாமி - எனது 1.அனைத்துயிர்க்கு மாண்டவனலகை சிறை யகற்றி ரட்சித்து மீண்டவன் மனத்திலன்பு நீண்டவன் வான்மகுடம் பூண்டவன் சினத்துப் பாவிகளுக்குஞ் செபஞ் செய்தாதரித்தவன் இனத்திற்ற விதிறை குலத்திற் பிறந்தவ னெழில் கொள் கிருபையாசனத்திற் சிறந்தவ னினைத்துச் சிலுவையிலறை யுண்டிறந்தவ னீடும் பரமகவாடந் திறந்தவன் - எனது 2. அப்போஸ்தலர் சொன்னாடுது அன்று மரியாட் களித்த காட்சி கண்டேடுது ஒப்பாய் நினைவோடுது உயிர்போய் வந்து கூடுது எப்போது மவரை யென்னிதையங் கொண்டாடுது தப்பாதெழும் விசுவாச மேவுது சாந்தப் பரம சினேகந் தாவுது முப்போ திசைந்து நன்னாவு கூவுது முழுது மோக்கிஷ வாஞ்சை யேவுது - எனது 3. பரமராச்சிய ராயன் பராபரனின் பட்சமொன்றான சேயன் கருணைபொழியு நேயன் கர்த்தன் கிறிஸ்துநாயன் பெருமைத் திருவாக்கியம் பேசு மேசுநாயகன் விரிவு பெருமூலகனைத்துங் காத்தவன் வேதநாயகன் பாடலேர்த்தவன் னரிய மறையினி லென்னைச் சேர்த்தவன் அருமையுடன் மனமகிழ்ந்து பார்த்தவன் - எனது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Piraana Naayaka Nezhundharulinaaninru Ekkalippaay Manamae. Kanamu Manathinur Panamu Marindhavan Katavulaesu Naayaka Suvaami - Enathu 1.anaitthuyirkku Maandavanalakai Sirai Yakarri Ratsitthu Meendavan Manatthilanpu Neendavan Vaanmakudam Poondavan Sinatthup Paavigalukkunj Sebanj Seythaadharitthavan Inatthirtra Vithirai Kulatthir Pirandhava Nezhil Kol Kirupaiyaasanatthir Sirandhava Ninaitthuch Siluvaiyilarai Yuntirandhava Neetum Paramakavaadan Thirandhavan - Enathu 2. Apposthalar Sonnaatuthu Anru Mariyaat Kalittha Kaatsi Kantaetuthu Oppaay Ninaivotuthu Uyirpoy Vanthu Kootuthu Eppothu Mavarai Yennithaiyang Kontaatuthu Thappaathezhum Visuvaasa Maevuthu Saandhap Parama Sinaegan Thaavuthu Muppo Thisainthu Nannaavu Koovuthu Muzhuthu Mokkisha Vaanjsai Yaevuthu - Enathu 3. Paramaraachsiya Raayan Paraabaranin Patsamonraana Saeyan Karunaipozhiyu Naeyan Kartthan Kiristhunaayan Perumaith Thiruvaakkiyam Paesu Maesunaayakan Virivu Perumoolakanaitthung Kaatthavan Vaedhanaayakan Paadalaertthavan Nariya Maraiyini Lennaich Saertthavan Arumaiyudan Manamakizhnthu Paartthavan - Enathu