பாடல் #39234
எழுந்தருளுமேசு சுவாமி
🔤 Ezhundharulumaesu Suvaami
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்தருளுமேசு சுவாமி விழுந்தலகை யழிந் தொழியத் தொழுஞ் சுரரும் வரலாச்சே- எழுந் 1.இஸ்திரிகள் கந்த வர்க்கம் எடுத்தேந்திப்பிரே தலங்கா ரத்தின் முறை தேடியிதோ ஆசரிக்க வந்தார்- எழுந் 2. மகதலாவூர் மரியூ மகிழ்ந்து தெரிசித் தேற்ற அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந் 3. பாடுபட்டு மரித்தடக்கப் பட்டதின மூன்றாச்சு ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடிந்தாச்சே எழுந் 4. பரதபித்து சீடரெல்லாம் படுந்துயரங் கொஞ்சமல்ல விரசாக ஞாயிறதில் வெள்ளியுதித்தாச்சே எழுந் 5. முத்திரையுங் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கிச் சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங்கலங்க- எழுந் 6. வேதாளம் நடுங்கி விழ விண்ணோர்கள் திரண்டு தொழ பாதாளமிடிந்து விழப் பராபரனே யெழுந்தருளும்- எழுந் 7. சத்திய வேதந் தழைக்க சகல உலகுஞ் செழிக்க நித்திய சீவனையழிக்க நேசருளங் கழிக்க- எழுந் 8. விஸ்தார உலக மதில் மெய்யான திருச்சபையி லிஸ் தோத்திர சங்கீர்தனம் எந்நாளு முண்டாக- எழுந் 9. வேத நாயகன் பாடி மெய் சபைகள் கொண்டாடி காதலுடன் கூடிவந்தார் கர்த்தாவே எழுந்தருளும்- எழுந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhundharulumaesu Suvaami Vizhundhalakai Yazhin Thozhiyath Thozhunj Surarum Varalaachsae- Ezhun 1.isthirigal Kandha Varkkam Etutthaenthippirae Thalangkaa Ratthin Murai Thaetiyitho Aasarikka Vanthaar- Ezhun 2. Makathalaavoor Mariyoo Makizhnthu Therisith Thaertra Agamakizhndhap Posthalarkal Athisayitthup Portra- Ezhun 3. Paatubattu Maritthatakkap Pattathina Moonraachsu Aetumutta Varaindha Thellaam Niraivaeri Mutinthaachsae Ezhun 4. Parathapitthu Seedarellaam Patunthuyarang Konjjamalla Virasaaga Njaayirathil Velliyuthitthaachsae Ezhun 5. Mutthiraiyung Kaavalkalum Mootiya Kallathum Neengkich Satthurukkal Natunatungkith Thayangki Mananggalangga- Ezhun 6. Vaethaalam Natungki Vizha Vinnorkal Thirantu Thozha Paathaalamitinthu Vizhap Paraabaranae Yezhundharulum- Ezhun 7. Satthiya Vaedhan Thazhaikka Sakala Ulakunj Sezhikka Nitthiya Seevanaiyazhikka Naesarulang Kazhikka- Ezhun 8. Visthaara Ulaka Mathil Meyyaana Thirucchapaiyi Lis Thotthira Sangkeerthanam Ennaalu Muntaaga- Ezhun 9. Vaedha Naayakan Paati Mey Sapaigal Kontaati Kaadhaludan Kootivanthaar Kartthaavae Ezhundharulum- Ezhun